Posts

Showing posts from March, 2022

ஆசை

"காமு! அரை டம்ளர் காபி குடுக்கறயா?" காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கேட்டார். "இப்போதானே குடுத்தேன்?உங்களுக்குக் குடுத்துண்டேயிருந்தா சமையல் ஆன மாதிரி தான்.ஒரே தடவையா திருப்தியா குடிச்சா என்ன?" "நாலு நாளைக்குச் சேர்த்து சாப்பிட முடியுமா?" "நன்னா பேசத் தெரியறது.அது என்ன ஆசையோ அந்த காபி மேல..." "காமு! ஆசையாலே தான் உலகமே இயங்கிண்டிருக்கு.ஆசை இல்லேன்னா யார் கல்யாணம் பண்ணிக்குவா?யாரும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலேன்னா நூறு வருஷத்துக்கப்புறம் லோகத்துல ஜனங்க யாராவது இருப்பாளா?" "அது சரி!இந்தக் காலம் மாதிரி என்னைக் கேட்டா கல்யாணம் பண்ணினா?அப்பா அம்மா காண்பிச்ச ஆளுக்கு கழுத்தை நீட்டிட்டு அவஸ்தைப் பட்டுண்டு இருக்கேன்." "அரை டம்ளர் காபிக்கு இத்தனை பேச்சா?நாளையிலேர்ந்து ரெண்டாவது காபி ஓட்டல்ல சாப்பிட்டுக்கறேன்." "இந்தாங்கோ!காபி மாதிரி வேற ஏதாவது 'ரெண்டாவது' பிடிச்சுடப் போறேள்." காமு!என் பேரில் நம்பிக்கையில்லையா?அதுவும் இந்த வயசுலயா?" "ஆம்பளைங்களுக்கு தான் வயசுன்னு ஒண்ணும் கிடையாதே.நாங...

மாயா

 "பாரூ!இன்னிக்கு பேப்பர்ல ஒரு விசித்திரமான சேதி வந்திருக்கு!கேளு!" "உங்களுக்கென்ன...கார்த்தால பல் தேய்ச்சதும் "ஸ்ட்ராங் காஃபி" கையில் கிடைக்கிறது.முதல்ல என்னை "பாரு"ன்னு கூப்பிடறதை நிறுத்துங்கோ.பார்த்ததெல்லாம் போறும்.அழகா "பார்வதி"ன்னு கூப்பிடுங்கோ.பேப்பர்ல தினமும் தான் சேதி வந்திண்டிருக்கு.லோகத்துல நடக்கிறதை தானே அவா போடறா?அதுல என்ன விசித்திரம்?" "விசித்திரம் தான்.கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்திலேயே ஒரு தம்பதி 'ம்யூச்சுவல் டைவர்ஸ்' கேட்டிருக்கா‌.அதாவது பிரிந்து போக ரெண்டு பேருக்குமே சம்மதம்.இத்தனைக்கும் கையில் குழந்தை.ஆனா பெண்ணோட அப்பா "மாமியார் கொடுமை,அதனால் தான் இப்படி ஆச்சுன்னு 'கேஸ்' போட்டிருக்கா.ஏன்னா அவா ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணின்டவா..." "அட ராமா! கலி காலம் னு சொல்றது சரியாத்தான் இருக்கு.நாமெல்லாம் நாற்பது வருஷமா ஒண்ணா  இல்லையா?ஒருத்தருக்கு ஒருத்தர் "அட்ஜஸ்ட்" பண்ணின்டு போக வேண்டாமோ?" "பாரு!ஏதோ நான் "அட்ஜஸ்ட்" பண்ணின்டு போறதால வாழ்க்கை ஓடிண்டிருக்கு!...

சக்தி

 பாகீரதி படுக்கையில் படுத்தபடியே மறுபடியும் சுவரில் மாட்டியிருந்த பெரிய கடிகாரத்தை உற்றுப் பார்த்தாள். "நைட் லேம்ப்" அதன் பக்கத்திலேயே இருந்தாலும் இரவின் இருட்டில் சரியாகத் தெரியவில்லை‌. '3 மணி இருக்கும்.தினமும் இந்த நேரம் விழிப்பு  எப்படி ஏற்படுகிறது?' 'இனி தூக்கம் ஏது?' அதற்கு முன்னாலும் அரைத் தூக்கம் தான். வயதான காலத்தில் சரியான தூக்கமில்லாமல் உடம்பும் இளைத்து விட்டது. 'எனக்கு மட்டும் ஏன் இப்படி?' ஒரே பையன் காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்காமல் வேதாந்தி போல ஆகிவிட்டானே?' இத்தனை பெரிய வீடு இருந்தாலும் சங்கருக்கு ஒரு ஆத்துக்காரி இருந்தால் எத்தனை கலகலப்பாக இருக்கும்?' 'அத்தனை படிப்பு படித்து பெரிய வேலையில் இருந்தவன் எப்படி வேலையை விட்டுவிட்டு "எதுவும் வேண்டாம்" என்பது  போல இருக்கிறான்?' எத்தனை எண்ணினாலும் ஏன் என்று புரியவில்லை. 'விளையாட்டுப் போல 3 வருஷம் ஆயிடுத்து. எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கை தானே கேட்கிறேன்? தினமும் பூஜிக்கும் அம்பிகை ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாள்? கண்களில் நீர் வழிந்து படுக்கையை நனைத்தது. பக்கத்தில் ...