நீ நான் நிலா
"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று... " மாலை நேரம் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த ரகு 'என்ன அருமையான கவிதை' என எண்ணிப் பழைய நினைவுகளில் மூழ்கியது. "அப்பா! இந்தக் கணக்கு எப்படின்னு சொல்லித்தரயா?" ஐந்து வயதான அருமைப் பிள்ளை கேட்டது காதில் விழவில்லை. "டேய் முரளி! அப்பாவுக்குப் பாட்டுக் கேட்கும்போது உலகமே மறந்துடும்டா.அதுவும் காதல் பாட்டுன்னா கேக்கவே வேணாம்.இந்தாங்கோ காபி!" ரகு திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டு காபியைக் கையில் வாங்கிக் கொண்டான். "முரளி கேட்டது காதுல விழுந்துதா?" "என்ன கேட்டான்?" "நீங்க பகவானிடம் இரண்டு மனம் வேணும்னு கேட்டப்போ உங்களை கணக்கு கத்துக் குடுக்க கேட்டான்.அது சரி!ஒரு மனசை வச்சுண்டே இத்தனை அவஸ்தையா இருக்கே.ரெண்டு மனசு எதுக்கு?கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது 'லவ்' பண்ணீங்களாக்கும்.ஏன் அவளையே பண்ணிக்கலை?நமக்கு தான் குழந்தை பிறந்து அஞ்சு வருஷம் ஆயிடுத்தே.எங்கிட்டே அன்பா தானே இருக்கீங்க?ஏன் சில சமயம் இந்தமாதிரி ...