Posts

Showing posts from February, 2024

நிழல்

"பார்வை ஒன்றே போதுமே!பல்லாயிரம் சொல் வேண்டுமா?"_ என்ற பாடல் 'டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்தது. ராகவன் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தான். "பாட்டு இருந்தா போதும் உங்களுக்கு!சோறு தண்ணி கூட வேண்டாம்!"_என்றாள் ரம்யா! "உன்னைப் பார்த்துண்டு இருந்தா அந்த பாட்டு கூட வேண்டாம்!உன் பார்வையே போதும்!நீ தான் சமையல் ரூம்லயே காலம் கழிக்கறையே?" "நீங்களே கவிஞனா  ஆயிண்டு வர மாதிரி தெரியறதே!கற்பனையிலேயே யாரும் வாழ முடியுமா?" "ரம்யா! காதல் கற்பனை தானே?அந்த கற்பனை இல்லாட்டா வாழ்க்கை ஏது?காதல் எப்படி ஏற்படறது?" "கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆனாலும் அது புரியலையாக்கும்!" "ரம்யா!உன் பேருக்கேத்த மாதிரி இன்னும் என் கண்ணுக்கு நீ ரம்யமா தான் இருக்கே!நமக்கு முன் ஜென்மத் தொடர்பு இருக்குமோ?" "முன் ஜென்மத்தை விடுங்கோ!இந்த ஜென்மத்தில் நமக்கு அந்த ஆண்டவன் ஒரு குழந்தையைத் தரவில்லையே!கார் பங்களா எல்லாம் இருந்தும் மனசில் சந்தோஷம் இல்லையே!நான் சொன்னபடி நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணின்டு இருந்தா எத்தனை மகிழ்ச்சியா இருந்திருக்கும்!" "ரம்யா!நீ எனக...

குரு அருளே திரு அருள்

Image
  🙏🙏ஓம் ஸ்ரீ குருப்யோ நம: "தினை விதைத்தவன் தினை அறுப்பான்!வினை விதைத்தவன் வினை அறுப்பான்"_என்று சொல்கிறோம்! நாம் செய்யும் "கர்மா" எனும் செயல்களின் விளைவான "கர்மவினை" என்பதை "கர்மா செய்வதன் மூலமே" தீர்க்க முடியும். நாம் கர்மாக்கள் "தர்மத்தின் வழி" இருந்தால் "துன்பம் அனுபவிக்காமல்"முன் ஜென்மங்களின் மீதியான "சஞ்சித கர்மா" கழிந்து விடுகிறது.இல்லாவிடில் "துன்பம் அனுபவிப்பது மூலம்"(ப்ராரப்த கர்மா)கழிகின்றது! நாம் செய்யும் "புதிய" கர்மா அதர்ம வழியில் இருந்தால் "மீண்டும் கர்மவினை" அனுபவிக்க நேர்கிறது! கர்மவினை "அனைத்தையும் "தீர்க்க முடியாவிடில் "ஆகாம்ய கர்மா" எனும் மீதியை மீண்டும் பிறவிகள் எடுத்துக் கழிக்கிறோம்! நம் கர்மாக்கள் "தர்மத்தின் வழியில்" உள்ளதா என்பதை பகவானை அறிந்த குருவே நமக்கு உணர்த்துகிறார்!🙏🙏 "குரு அருளே திரு அருள்"🙏🙏