ஆத்மா
"அப்புறம்?" நடேசன் யோசித்தபடி "அந்த பொண்ணு நடந்து போனா!நானும் அவ பின்னாடியே நடந்து போற மாதிரி இருந்தது!" "அப்புறம்?" "அவ திரும்பி பார்த்தா!அவ கண்ணைப் பார்த்ததும் நான் அதுக்குள்ளே அப்படியே மூழ்கற மாதிரி இருந்தது.உடனே முழிச்சிண்டுட்டேன்!" "பகல் கனவு பலிக்காதுன்னு சொல்லுவா!அம்மா!நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணின்டு பயந்துண்டு இருக்காதே!"_ராகவன் பார்வதி நடேசனை கவலையுடன் பார்த்தாள்! "அவ மலைமேல் ஏறி அஙகிருந்து குதிச்சிருந்தா இவரும் தானே குதிச்சிருப்பர்?அதுக்கு தான் வயசானா சொன்ன பேச்சை கேட்கணும்னு சொல்றது!" "ஒரு மட மாது உருகுகின்றாளே உனக்கா புரியவில்லை..."_நெஞ்சில் ஓர் ஆலயம் பாட்டு டிவி யில் ஓடிக்கொண்டிருந்தது மூவர் மனதிலும் திகில் கிளப்பியது! "அப்பா! இந்தாங்கோ!சூடா காபி சாப்பிடுங்கோ!குழப்பம் சரியாயிடும்!"_என்றாள் ரம்யா ஆர்வமுடன் காபியை வாங்கிய நடேசனுக்கு "மனைவி மட்டும் இல்லை மாட்டுப்பெண் அமைவதும் பகவான் செயல்" என்று தோன்றியது! "டேய் ராகவா!நான் உங்கம்மா சொல்படி நடந்துக்கற மாதிரி நீயும் ரம்ய...