Posts

Showing posts from May, 2021

குணம்

குழந்தையைப் பார்த்துக்குங்கோ! போளி சாப்பிடும் போது உங்களுக்கு அதிலே தான் கவனம். அதெல்லாம் பார்த்துண்டே தான் இருக்கேன்.நம்ம தெருல தானே விளையாடிண்டு இருக்கான்.வயசும் ஆறு நடக்கிறது.டேய் முரளி இங்க வா_பேரனைக்கூப்பிட்டார். அவனிடம் ஒரு போளி கொடுத்தார் ராமசாமி.  லட்சுமி,  இன்னொரு போளி போடறியா?உன்னை மாதிரி இவ்வளவு ருசியா யாரேலயும் பண்ண முடியாது. இப்படிச் சொல்லிச் சொல்லியே காரியம் சாதிச்சுக்கறேள். வேற வழி? போளி சூடாகத் தட்டில் விழுந்தது. கொஞ்சம் நெய் விடறியா? அட நாராயணா ! ஏற்கனவே ஷுகர்.போனா போ றதுன்னு போளி பண்ணா நெய் வேறயா? பிரஷர் ஏறப்போறது  நான் தான் அவஸ்தைப் படணும். சரி சரி வேண்டாம்,என்றார் அவசரமாக. லட்சுமி! என்ன? நீ சொல்றபடி தானே நான் கேட்கிறேன்? நீங்க மட்டுமா? எல்லாரும் தான். அப்படின்னா நம் பையனை மட்டும் குறை சொல்றயே_பெண்டாட்டி  பேச்சை கேட்டுண்டு ஆடறான்னு? இதை மாட்டுப் பெண் முன்னாடி சொல்லித் தொலைக்காதீங்க. சரி சரி பேரன் முரளி ஓடி வந்து போளி கேட்டான். இப்போதானேடா குடுத்தேன். ஃப்ரண்ட்ஸுக்கு கொடுத்துட்டேன் தாத்தா. பாட்டியிடம் வங்கிக்கோ லட்சமி! அவ்ளோ தான். அது இல்ல .சின்ன வயச...

உறவு

கல்யாணி ,உன் அண்ணா வந்திருக்கான் பார். கிருஷ்ணனை  கொஞ்ச தூரத்தில் பார்த்ததுமே சொன்னார் சந்துரு. நான் எப்பவுமே அரிசி ஜாஸ்தியா தான் வைப்பேன்.திடீல்னு யாராவது வந்தா சாப்பிட வேண்டாமா?அது இருக்கட்டும்.என் அண்ணா வந்தா என்னை விட உங்களுக்கு தானே குஷி?நீங்க பேசாத விஷயம் உண்டா? சட்டென்று மௌனமானாள் கல்யாணி.அவள் மனம் கனத்தது.முப்பது வருடத்திற்கு முன் நடந்தது ஆனாலும் நேற்று நடந்தது போல் தான் இருந்தது கிருஷ்ணன் கல்யாணம்.சில நிகழ்ச்சிகள் எப்படி மனதின் அடியில் நதி போல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன? அவளுடன் படித்த ராதாவை எப்படி மறக்க முடியும்?எத்தனை அழகு!என்ன அறிவு!எவ்வளவு அன்பான சினேகிதி! அவள் அடிக்கடி தன்னைப் பார்க்க வந்தபோது அண்ணா பார்த்து மயங்கியதில் வியப்பு ஏது? அழகில் மயங்காதவர் யார்?  கல்யாணத்திற்கு பிறகு அவனை எல்லோரும் ராதா கிருஷ்ணன் என கேலி செய்தது இப்போதும் காதில் ஒலித்தது. கல்யாணி பெருமூச்சு விட்டாள்.விதியை யாரும் வெல்ல முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது கல்யாணி சுய நினைவுக்கு வந்தாள். ஏன்னா,அலை ஓசை நாவல் படிச்சுட்டேளா?அண்ணா கிட்ட திருப்பி குடுக்கணுமே? ஏற்கனவே நடிச்சது தான்.இருந்தா...

காற்று

 ருக்மிணி மாமி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து மடிசார் புடவையுடன் வெகு கவனமாக சமையலில் இயக்கியிருந்தார்.ஆத்துக்காரர் வேங்கடராமன்   வழக்கம்போல் நான்கு மணிக்கே எழந்து பூஜை அறையில் பழைய பூக்களை எல்லாம் ராம் நாமம் சொல்லிக் கொண்டே எடுத்துவிட்டு இரண்டாவது காபிக்காக காத்திருந்தார். இன்று கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் சாப்பிட வரப்போகிறார்.மனதில் இருக்கும் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட வேண்டும். கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.பார்க்க ஆஜானுபாகுவாகப் பெருமாளைப் போல் இருப்பார்.நடந்து வரும்போது எல்லோருடைய கைகளும் தானாக மேல் எழுந்து தொழும்.சாஸ்திர சம்பிரதாயங்களில் யாருக்கு எந்த கேள்வி இருந்தாலும் அவரிடம் பதில் இருந்தது.  வெங்கட் மனதில் மீண்டும் கேள்விகளை அடுக்கினார். இந்தாங்கோ காபி.இது இல்லாட்டா உங்களுக்கு   சரிப்படாது.எதிலாவது திருப்தி இருந்தா சரி. ருக்கு ,உனக்கு கூட தான் திருப்தி இல்லை.ஓயாம கோயிலுக்கு போயிண்டிருக்க... அது ஆத்மாவுக்கு பலம். உடம்பு இல்லாம ஆத்மா ஏது?உடம்பை வளர்த்தேன்_உயிர் வளர்த்தேனேன்னு திருமூலர் திருமந்திரத்துல சொல்லியிருக்கார். உங்...

இடைவெளி

"ஏண்டா சீனு.உன் ஆத்துக்காரி இந்தப் புடவை மேல பட்டாளான்னு கேட்டுச் சொல்லேன்." "தினமும் இதே கேள்வியாம்மா?அவளுக்குத் தெரியாதா அதை நீ மடியா உலர்த்தியிருக்கேன்னு?தினமும் சொல்லிண்டு தானே இருக்கே?அவளுக்கும் இதெல்லாம் தெரியும்.அவளோட அம்மா தினமும் எத்தனை பூஜை பண்றான்னு உனக்குத் தெரியுமா?" "ஏண்டா! ஒரு சாதாரணக் கேள்விக்கு உன் ஆத்துக்காரி போறாதுன்னு அவளோட அம்மாவையும் "சப்போர்ட்"டுக்குக் கூப்பிடணுமா?கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட முடியலை.அதுக்குள்ள ஒரேடியா அந்தப்பக்கம் சாய்ஞ்சுட்டே.எல்லாம் என் தலைவிதி. வயசானதாலே என்னால சீக்கிரம் எழுந்துக்க முடியலை.இல்லாட்டா நான் பார்த்துக்க மாட்டேனா?நான் என் மாமியாருக்கு எத்தனை ஒத்தாசையா இருப்பேன் தெரியுமா?" "கார்த்தால உன் புராணத்தை ஆரம்பிக்காதேம்மா. ஆபீஸ் அவசரத்துல  எனக்கு முக்கியமானதெல்லாம் மறந்துடறது.நீ அவகிட்டேயே கேட்டா என்ன?" "ஆமாண்டா! நான் பேசினாலே உனக்குப் பிடிக்கமாட்டேன்றது.'ஆசை அறுபது நாள்.மோகம் முப்பது நாள்'னு சொல்லுவா.உனக்கு அது தீராது போலிருக்கு" "ஏம்மா ஏதேதோ புலம்பறே! ரமா உன் மாட்டுப...

பக்தி

சிவராமனைப் பற்றி யாரைக் கேட்டாலும் வரும் முதல் வார்த்தை: கண்டிப்பானவர். பேங்க் மேனேஜராக இருந்தவர். எல்லோருக்கும் கடன் கொடுத்து அவர்கள் வாழ்க்கை உயர வகை செய்யும் அருமையான வாய்ப்பு. ஆனால் வங்கியின் விதிப்படி அனைத்தும் இருந்தால் தான் கடன் தருவார். உங்களுக்கு டிஸ்கிரீஷன் இருக்கு சார்.உங்க  ஃப்ரண்ட்ஸ் எவ்வளவு தாராளமா லோன் தருகிறார்கள் .வாங்குபவர்கள் சரியாகத் திருப்பிக் கட்டியும் விடுகிறார்களே_என ஊழியர்கள் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. ரிடையர் ஆன பின்னும் அதே கண்டிப்பை தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். அவர் மனம் பக்தியின் பக்கம் திரும்பியது.நேரமும் நிறைய இருந்தது. அன்று காலை.... ஏன்னா,எல்லாரும் ரிடையர் ஆன பிற்பாடு ரிலாக்ஸ்டா இருப்பா.நீங்க என்னன்னா இன்னிக்கு அஞ்சு மணிக்கே எழுந்துட்டேள் போலிருக்கே.ஏதாவது கவலையா.?அதான் ரெண்டு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணியாச்சே.மாப்பிள்ளைகளும் தங்கமானவா.பையன்  காலேஜ் முடிக்க இன்னும் ஒருஷம் இருக்கு.மார்க் நன்னாதானே வாங்கறான்?  அவள் கவலை அவளுக்கு .அவர் ரிடையர் ஆனதால் பார்ட் டைம் வேலை நமக்கு ஃபுல் டைம் வேலை ஆகிடுத்தே என்ற கவலை. க...

பொருள்

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்..... மாலை ஆறு மணி டி.வி.யில் கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டு இருந்தது. சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பரவசம் வீடெங்கும் அந்த மாலை வேளையில் நிறைந்திருந்தது. பத்மா மாமி கோயிலுக்குக் கிளம்பிக்  கொண்டிருந்தாள்.காதில் வைரம் ஒளி வீசிற்று அங்கேயே பிரசாதம் சாப்பிட்டுவிட்டு ஆத்துக்காரர் க்கும் வாங்கி வந்துவிடுவாள்.இரவு உணவு அதோடு சரி.பழம்,ஒரு டம்ளர் பால். பேத்தி ரூம்ல விளையாடிண்டு இருக்கா.பார்த்துக்குங்கோ.அவா ரெண்டு பேரும் ஆபீஸில் இருந்து வர நாழியாகும். நீங்க பாட்டுக்கு எதையாவது படிச்சிண்டு உட்கார்ந்திருக்காதீங்கோ. கூட அழைச்சிட்டு போனா என்ன? நீங்க ஃப்ரீயா இருக்கலாம்னா?அதான்  கார்த்தால அழைச்சிட்டு போறேனே.இப்ப நான் திரும்பி வரும்போது இருட்டிடும்.இந்தக் கண்ணாடில ஒண்ணும் தெரில.போட்டுக்காமலும் இருக்க முடில. கண்ணாடியும் கல்யாணமும் ஒண்ணு தான்_கோவிந்தன் நினைத்துக் கொண்டார். பார்த்தீங்களா.கார்த்தால சொல்ல மறந்துட்டேன்.பெருமாள் கனால வந்தார்.மீதியெல்லாம் மறந்துடுத்து. வாழ்க்கையே பகவான் காணும் கனா தான்  என்ன சொல்றேள்? நம் கல்யாணப் போட்டோவை பார்.நான் எ...

பசியும் உணவும்

"இந்து! கோயிலுக்குப் போலாமா?" "வாங்கோ மாமி!வெள்ளிக்கிழமை அம்பாள் மாதிரி வந்திருக்கீங்க.உங்களைப் பார்த்தாலும் அம்பாள் மாதிரியே இருக்கு.உட்காருங்கோ.டிபன் பண்ணின்டிருக்கேன்.ஆயிடுத்து" "அப்படியே ஆத்துல விளக்கையும் ஏத்திட்டு வா.அம்பாள் எல்லா இடத்திலயும் இருக்கா." "சரி மாமி." "ஆத்துக்காரர் எங்கே?" "படிச்சிண்டிருக்கார் மாமி" "என்ன படிச்சிண்டிருக்கார்.  பாகவதம் மாமி.விளக்கேத்தறச்சே எழுந்து முகம் அலம்பிண்டு விபூதி இட்டுண்டுடுவார்.விஷ்ணு சஹஸ்ரநாமம் டி.வி.ல வரும்.கூடவே சொல்லுவார்." "பசங்க ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணிப் பேரன்  பேத்தியும் எடுத்தாச்சு.பக்தி மார்க்கத்துல இறங்கறது நல்லது தான்.கார்த்தாலே நீ எப்போ எழுந்துக்கறே?" "நான் 5 மணிக்குள்ள எழுந்து  பல் தேய்ச்சுட்டு தீபம் ஏத்திடுவேன்." "ஆத்துக்காரர்?" "அவர் ஆபீஸ் போகும்போது ஆறுமணிக்கு தான் எழுந்திண்டிருந்தார்.ஆனா நான் இப்போ அவரையும் 5மணிக்குள்ள எழுந்து சுப்ரபாதம் சொல்லச் சொல்லிட்டேன்.அவரும் அதே மாதிரி பண்ணறார். காபி சாப்பிட்டுக் குளிச்சுட்டு சந...

நெஞ்சும் நெஞ்சும்

ஆஞ்சனேயரைக் கண்மூடித் த்யானித்த முரளி கண்ணைத் திறந்தபோது எதிரில் அந்தப் பெண் கண்மூடியபடி ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருந்தாள். தினமும் மாலை வேளையில் நாகேஸ்வர ராவ் பார்க்குத் தன் பையனுடன் வருபவள்.அவனும் பக்கத்திலேயே. உடனே ஒரு பெருமூச்சு எழுந்தது. 'பானு மட்டும் உயிரோடு இருந்திருந்தா இவளைப் போல நந்துவைப் பார்க்குக்குக் கூட்டிண்டு போவா.நான் ஆபீஸ் வேலைய விட்டுட்டு அலைய வேண்டாம்.யாரையும் நம்பி ஒப்படைக்கவும் பயமா இருக்கு.வீட்டில் இருக்கும்போது சமையல்காரி தனம் பார்த்துக்கொண்டாலும் அவளை நம்பி நந்துவை வெளி இடங்களுக்கு அனுப்ப முடியுமா?அதுவும் ஐந்து வயதுப் பையனை.அவனைத் தான் மட்டும் தனியாக  வளர்க்க முடியுமா?' முரளிக்கு மலைப்பாக இருந்தது. எண்ண ஓட்டத்தை நிறுத்திய முரளி அப்போது தான் நந்து தன் பக்கத்தில் இல்லாமல் இருப்பதைக் கவனித்தான்.அவன் எதிரில் இருக்கும் அந்தப்பெண்ணின் பையனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். "நந்து! வா பார்க்குக்குப் போலாம்" "அப்பா!அப்பா!இது தாம்பா ஆனந்த்.இவனோடதான் நான் தினமும் விளையாடுவேன்.இவனோட போலாம்பா" "சரி" என்ற முரளி அந்தப் பெண்ணும் நந்து கூறியதை...

மாய வலை

"பெண்மையின் பார்வை ஒரு கோடி.அது பேசிடும் வார்த்தை பல கோடி" டி.வி.யில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜெய் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை. “எனக்கு ஏன் எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை?' ஐந்து வருடங்களாகத் தினமும் மனதில்  எழும் கேள்வி தான். பதில் தான் கிடைக்கவில்லை. சீனு உள்ளே நுழைந்தான். ஏண்டா ஜெய்! உனக்கு இதுவரைக்கும் 'மேட்ரிமோனியல் சைட்'ல இருந்து  ஆயிரத்துக்கு மேலே ப்ரொஃபைல்ஸ் அனுப்பியிருப்பேன்.ஒருத்தரையுமாடா பிடிக்கலை?" "நான் என்னடா பண்ணட்டும்?நானும் நீ அனுப்பின பெண்கள் போட்டோ எல்லாம் பார்த்தேன்.எத்தனையோ பெண்கள் லட்சணமா தான் இருக்கா.ஒத்துக்கறேன்.ஆனா அவாளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தோணமாட்டேன்றதே!" "நீ ஒரு விசித்திரமான பிறவிடா.நாம ரெண்டு பேரும் ஒண்ணா தான் பார்க்க ஆரம்பிச்சோம்.என் குழந்தையை ப்ளே ஸ்கூல்ல விட்டுட்டு வரேன்.உனக்கு மேட்ரிமோனியல் கூட நான் தான் பார்க்க வேண்டியிருக்கு.உன் அப்பா அம்மாவைப் பத்தி நினைச்சுப் பார்த்தியா?ஏண்டா இப்படி இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்க?யாரையாவது 'லவ்' பண்ணி அவளுக்குக் கல்யாணம் ஆயிடு...

தாகம்

ரேவதி இன்னொரு கரண்டி பாயசம் போட்டுக்கோ.அருமையா இருக்கு.அதுவும் நாம் எத்தனை வருஷம் கழிச்சி மீட் பண்ணறோம்.என்ன யோசனை? திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்த ரேவதி தான் கல்யாணப்  பந்தியில் இருப்பதை உணர்ந்தாள். சாரி கல்யாணி,எதோ யோசனை.சரி போடுப்பா. சாப்பிடும்போது என்ன யோசனை வேண்டியிருக்கு?.ரசிச்சு சாப்பிடா தான் உடம்புல  ஓட்டும்,தெரியுமோல்லியோ?.நாம் காலேஜ் படிக்கும் போது நீ எவ்வளவு அழகா இருப்பே.பசங்கள்ளாம் உன்னையே நோட்டம் விட்டுண்டு இருப்பா.எல்லாம் மறந்து போச்சா? மறந்து தான் போயிற்று. எதனால் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் ரேவதி. மற்றவர் கவலைகளை எல்லாம் தன் மேல் இழுத்துப் போட்டுக் கொள்கிறோமோ? ரேவதி,பாயசம் சாப்பிடும் போது அதில் தான் கவனம் இருக்கணும்.இல்லாட்டா ருசி எப்படி தெரியும்? அதுக்கில்லே கல்யாணி.மனசுல சதா ஏதோ கவலை ஓடிண்டு இருக்கு அதான் பொண்ணு பையன் ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி குழந்தையும்  பொறந்தாச்சுன்னியே.அப்புறம் என்ன? நம்மள  மட்டும் பார்த்துண்டு சந்தோஷமா இருந்தா போறுமா? அது சரி.நீ என்ன பகவானா எல்லாரையும் பார்த்துக்கறதுக்கு? எங்காத்துக்காரர்க்கு வயணமா சமைச்சு போட...

வாழ்க்கை

மரகதம் மீண்டும்  புரண்டு படுத்தாள் ! தூக்கம் வந்தால் தானே? கல்யாண வயதில் பெண் இருந்து கல்யாணம் அமையாமல் நாட்கள் போய்க் கொண்டே இருந்தால் தூக்கம் எப்படி வரும் ? பக்கத்தில் படுத்திருந்த பெண் நித்யாவைப் பார்த்தாள். அயர்ந்து தூங்குவது போல் தான் இருந்தது.'ஆபீஸ் போய் வரும் களைப்பில் தூங்குகிறாள்' என்ற எண்ணம் ஏற்பட்டது. ஏதாவது வேலை செய்பவர்க்குக் களைப்பு ஏற்பட்டு கவலையையும் மீறித் தூக்கம் வந்துவிடுகிறது.ஆனால் தானும் காலையிலிருந்து வீட்டு வேலையெல்லாம் செய்து கொண்டு தானே இருக்கிறோம்?உடம்பிலும் வயதாகிவிட்டதால் களைப்பும் அலுப்பும் உண்டானாலும்  மனதில் உள்ள கவலையே எல்லாவற்றையும் மிஞ்சிவிடுவதை உணர்ந்த  போது மரகதத்துக்கு ஆயாசமாக இருந்தது. அழகு,படிப்பு,அருமையான வங்கி வேலை. திடீரென தன் மகள் வாழ்க்கையை தானே கெடுத்து விட்டோமோ என்ற திகில் ஏற்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது மனதில் அப்படியே நின்று விட்டது.இ தன்னுடன் வேலை செய்யும்  ஶ்ரீதரை ஒருநாள் நித்யா அழைத்து வந்தாள். "அம்மா!  யாரும்மா ?"_ இரண்டாவது பெண் ரமா ரகசியமாகக் கேட்டாள் . "அம்மா ! இவர் ஶ்ரீதர்.என்னோட ஆபீஸ்ல வேலையா ...

கனவு

நாளைக்கு திருச்சிக்கு போறோம் ,கல்யாணத்துக்கு.ஞாபகம் இருக்கோல்லியோ?_ நந்தகுமார் கேட்டான். ஏன் இல்லாம?நீங்க தான் எல்லாம் மறந்துடுவீங்க.மூணு பேருக்கும் ரெண்டு செட்  ட்ரெஸ் எடுத்து வச்சுட்டேன்,என்றாள் புவனா. செல்போன் சார்ஜர் ரெண்டு எடுத்து வை .பையனை எழுப்பு.ப்ளஸ் டூ படிக்கிறவன் காலைல சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாமோ? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.நீங்க காய் வாங்கிண்டு சீக்கிரம் வாங்க.தெரிஞ்சவாளை பார்த்தேன்னு நிதானமா வராதீங்க.அது சரி  நீங்க ரூம் ரிசர்வ் பண்ணீங்களா? சத்திரத்தில் தங்க இடமிருக்காது, ஒரு ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா?எல்லா பந்துக்களையும் ஒரு சேரப் பார்க்கலாம்னு தானே அந்த காலத்துல இந்த மாதிரி எல்லாம் பண்ணியிருக்கா? புரியறது.உங்களுக்கு தேவகியைப் பார்க்கணும்னு ஒரே பரபரப்பு. அவதானே நம் கல்யாணத்துக்கு காரணம் ? அதுவுமில்லாம அவ உன்னோட ஃப்ரண்ட் தானே.தூரத்து உறவு வேற.அவ தானே உன் ஜாதகத்தை எங்காத்திலே குடுத்தது? கரெக்ட் தான்.நீங்க ரெண்டு பேரும் ஒரே கோத்ரம்.இல்லாட்டா எனக்கு இடம் ஏது?இப்ப எந்த ஊர்ல வேலை பண்றா? தெரியல.கல்யாணத்துக்கு கட்டாயம் வருவா இல்லியா? இல்லாட்டா லும் அவாத்து...

அன்பு

ராமச்சந்திரன் விழித்துக் கொண்டார்.வெளியில் பார்த்தார்.விடிய ஆரம்பித்திருந்தது.சற்று  நேரம் படுக்கையிலேயே   உட்கார்ந்து இருந்தார்.எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. எழுபது வருடங்கள் ஓட்டியதே ஆயாசமாக இருந்தது.உடல் தளர்ந்து  விட்டது உடம்புக்கு எந்த வியாதி இருந்தாலும் மனது மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை ரசிக்கும் என எண்ணினார். ரங்கன் பத்து நாட்களாக  ஒரு போன் கூடப் பண்ணவில்லை.உள்ளூரில் இருந்தும் பார்க்க கூட வரவில்லை.கேட்டால் ஐ. டி. கம்பெனி வேலை என்றால் அப்படித்தான் என சொல்வான்.அதனால் தானே ஆபீஸ் பக்கத்தில் வீடு வாங்கிப் போய்விட்டான்.போதாதென்று மாட்டுப் பெண்ணிற்கும் ஐ.டி.யில் வேலை.பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே அவர்களுடன் இருக்கலாம்.நாம் கட்டின வீட்டை விட்டு நகர நமக்கு மனம் வரவில்லையே.ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது என்பது தான் வாழ்க்கையா? பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி லட்சுமியைப் பார்த்தார்.ஆறுதலாக இருந்தது. பெண்களுக்கு எத்தனை வயதானாலும்  சமையல் உட்பட வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு முடிவதில்லை. தனக்கு காலையில் வாக்கிங் போக...

மணம்

அனு,எனக்கு ஒரு சந்தேகம் ஆபீஸிலிருந்து வந்து இன்னும் ஷர்ட்ட கூட கழட்டல.அதுக்குள்ள கேள்வியா?காபி சாப்பிடறதுக்குள்ள அவசரமா?உங்க சந்தேகத்தை தீர்க்கறதுக்குன்னே நான் ஏதாவது படிச்சிண்டே இருக்கணும்.சரி,சொல்லுங்கோ. கல்யாணம்கறது ஒரு பொறுப்பு தானே ? விளக்கமா சொல்லுங்கோ கல்யாணம் ஆனா அடுத்தது பிள்ளைகள்.அப்புறம் அவாளைப் எப்படி ஒழுங்கா வளர்த்து படிக்க வச்சு நல்லபடியா  கல்யாணம் பண்ணி வைக்கணும்.இல்லியா?  இதென்ன கேள்வி?எல்லாரும் அதானே பண்ணிண்டு இருக்கா? அதுக்காக எல்லாரும் எவ்வளவு அவஸ்தை படறா.அப்போ கல்யாணம்னாலே பொறுப்புன்னு தானே அர்த்தம்?  முரளி ஆனந்தியை மனதில் வைத்து கேட்டான். அழகு தான்.கல்யாணத்தில வேற ஒண்ணும் இல்லையாக்கும். நீ சொல்றது புரியறது.அதில ஒரு கேள்வி இருக்கு. காபி சாப்பிட்டுக் கொண்டே கேட்டான. ஒரு நாளைக்கு ரெண்டு கேள்வி தான்.தெரியுமில்ல.கேளுங்கோ. நாம் வாழ்க்கைல எத்தனையோ பேர்களைப் பார்க்கிறோம்.சிலரை மட்டும் பழகாமலே  முதல்ல பார்த்த உடனே சட்னு ஏன் பிடிக்கிறது? அவன் மனம் அனுவுடன் நடந்த நிச்சயதார்த்திற்கு மறுநாள் நடந்ததை எண்ணிப்பார்த்தது. ஆனந்தி வேறு டிபார்ட்மெண்டில் இருந்தாலும் ச...

மனம்

எப்போதாண்டா கல்யாணம் பண்ணிக்கப் போற?தினமும் கேட்டு கேட்டு எனக்கே அலுத்தப் போறது சுந்தர் சாப்பிட்டு எழுந்தான் வழக்கம் போல பதில் இல்லை யாரையாவது லவ் பண்ணா அதையாவது சொல்லித் தொலைடா.யாரானாலும் பரவாயில்லை.வயசு ஏறிண்டே போறது. ஆபீஸுக்கு கிளம்பினான் தான் லவ் பண்ண பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று எப்படிச் சொல்வது? பங்களாவில் இருந்து வெளியில் வந்து காரில் ஏறினான். மனம் பின்னோக்கிப் பாய்ந்தது. மறுபடியும் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தான் என்பது தவறு._எப்போதும் உள்ளத்தின் அடியில் நதி போல ஓடிக்கொண்டிருந்தது. அதை மறந்தால் மற்றொன்றை நினைக்கலாம். முடியுமா? பெண்களின் மனதைப்  புறிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி மனதில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. ஆறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஏமாற்றத்தை எப்போதும் மறக்க முடியாது என்று தோன்றியது ஐயா_டிரைவர் என்ன முருகா? நேத்து வந்த பெரியவர் வீட்ல தான் எங்க அப்பா  வேலைல இருந்தார்.தங்கமானவங்க.பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கும்.நல்ல படிப்பு சரி முருகா.ஆனா எனக்கு யாரையும் பிடிக்கலையே.ஏன்னு எனக்கே தெரியல. வழக்கமான பதில் தான் ஆபீஸில் இறங்கி பரபர என்று வேலை பார்க்க...

நிலம்

எத்தனை நாளைக்கு தான் நானே சாதம் போட்டுண்டு இருக்கிறது?உனக்குன்னு ஒருத்தி வரவேண்டாமாடா? ஊரிலிருந்து வந்த ஒரே பிள்ளை நந்தகுமாரைப் பார்த்துக் கேட்டாள் வனஜா நீயா சாப்பாடு போடறே.நிலம் விளையாது.நமக்கெல்லாம் சாப்பாடு கிடைக்கிறது. கணவர் சுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டே கேட்டார். பேப்பர் கையில் இருந்தா தான் உங்களுக்கு தூக்கம் வரும்.என்னிக்காவது அதை முழுசா படிச்சிருக்கேளா?பையனுக்கு அட்வைஸ் பண்ணறத விட்டுட்டு... வேளை வந்தால் தன்னால நடக்கறது.. இப்படியே வேதாந்தம் பேசிண்டிருங்கோ.நானும் பேசாம இருந்தா உங்களுக்கு தட்டுல சாதம் விழுமோ? சுந்தரம் ஏதும் பேசவில்லை நந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஏதும் பதில் சொல்லவில்லை.இருந்தால் தானே சொல்வதற்கு? சாதம் போட்டு விட்டு அந்த மதிய வேளையில்  சற்று காற்று வாங்கலாம் என வனஜா  வாசலுக்கு வந்தாள். தூரத்தில் நடந்து வருவது யார்?  நிர்மலா வா? அவள் மனம் நடுங்கியது. என்ன படிப்பு!என்ன அழகு!என்ன குணம்!எவ்வளவு ஆச்சாரமான குடும்பம்! நினைத்தது மே கண்ணில் நீர் திரண்டது.கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் கணவனை இழந்து விட்டாளே! நீட் கோச்சிங் சென்ட்ரலில் அவள் வேலை ...

உயிர்ப்பு

 #சிறுகதை மகன் கணேஷ் கூட்டிக் கொண்டு போன இடத்தைப் பார்த்ததும் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது அலமேலு மாமிக்கு.  மனம் இன்பத்தால் திளைத்து பழைய ஞாபகங்களை அசை போட்டது. பிறந்த வீட்டிலும் வைதீகம்...புகுந்த வீட்டிலும் வைதீகம்..காதுகள் வேத கோஷங்களைக் கேட்டு கேட்டு இனம் புரியா இன்பத்தில் ஆழ்ந்த தருணங்கள் அல்லவா? கஷ்ட ஜீவனம்தான்...ஆனால் வத்தக் குழம்பும் குமுட்டியில் சுட்ட அப்பளமும், மிளகு சீரக ரசமும் வாய்க்கு தேவாமிருதமாக இருந்தது...போக வர மாட்டு வண்டி...அழகான அக்ரஹாரம்....இதற்கு மேல் செவிக்கு அமுதமாக வேத கோஷங்கள்...அந்த கிராம வாழ்க்கை போல் வருமா?  அந்த இனிமையான நினைவுகள் அடிக்கடி வந்து வந்து போனது அலமேலு மாமிக்கு. கணவர் சுப்புண்ணி எனப்படும் சுப்ரமணியன் கனபாடிகள்.....உள்ளூரில் அத்தனை சம்பாத்தியம் இல்லை.  எதையும் கேட்டு பெற மாட்டார்..கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் வைதீக குடும்பமாக அமைந்ததால் தன்னுடைய ஒரே பையன் கணேஷை வேதம் படிக்க அனுப்ப ஆசைப்பட்டாள் அலமேலு.. அதுவும் குழந்தை ருத்திரமும், விஷ்ணு சகஸ்ரநாமமும் அழகாக கணீரென்ற குரலுடன் சொல்வ...

சக்தி

மகாலிங்கம் சற்றுக் கண்ணை மூடி தியானம் செய்தார்.சற்றுக் குழப்பமாகத்தான் இருந்தது. இந்தாங்கோ காபி.கேட்டா தரமாட்டேனா? புஸ்தகத்தை கைல வச்சுண்டு தூங்குவானேன்?அதும் ராமகிருஷ்ணர் உபதேசம். ஏற்கனவே ரெண்டு டோஸ் ஆயாச்சு.வயசானா காபியை குறைச்சிக்கணும்.இல்லாட்டா உங்களைப் போல ராத்திரி பூராவும் தூங்காம விட்டத்தை பார்த்துண்டே இருக்கணும். பாகி(சகதர்மிணி பாகீரதியை இப்படித்தான் அழைப்பார்)நான் ராத்திரி பூரா தூங்கலேன்னு நோக்கெப்படி தெரியும்? நீயும் தூங்கலியோ? முழிச்சிக்கறப்போ பார்க்கிறது தான். அது சரி ,அன்னிக்கு மயிலாப்பூர் குளத்தங்கரைல அம்பாளைப் பார்த்தேன்னு சொன்னேளே.அதுக்கப்புறம் எங்கயாவது பார்த்தேளா? அவள் கவலை அவளுக்கு.மறுபடியும் டாக்டரைப் பார்க்க போகும் போது சொல்ல  வேண்டுமே.அதுவும் தனக்காகத்தான் டாக்டரிடம் போகிறேன் என்று பொய் சொல்லி துணைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.டாக்டர் இருவரிடமும் பேசுவார். மறுபடி பார்த்தா சொல்லறேன் பதில் சொன்ன மகாலிங்கம் புத்தகத்தை பார்த்தாலும் மனம் என்னவோ ஆயிரம் முறை அசை போட்டதை மறுபடியும் நினைத்துப் பார்த்தது. அன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி இருக்கும் இருவரும் மயிலாப்ப...

சுழல்

மாலதீ ,மாலு..... முகுந்தன் வீட்டுக்குள் நுழையும் போதே ஏக உற்சாகத்தில் இருந்தான். என்ன இவ்வளவு பரபரப்பு? ஜி.எம். ப்ரமோஷன் வந்துடுத்தாக்கும் புன்னகை செய்தபடி கேட்டாள் மாலதி ப்ரமோஷன் இருக்கட்டும்.அத விட சூப்பர் மேட்டர் சொல்லுங்கோ _அமைதியாகக் கேட்டாள். என் ஃப்ரண்ட் யு.எஸ்.ல இருக்கான்னு சொல்லுவேனே ஆமா எனக்கு யு.எஸ். விசா ஏற்பாடு பண்றேன்னு போன் பண்ணினான்.இத்தனை நாள் கேட்டது இப்போ தான் நேரம் வந்திருக்கு. மாலதிக்கு திக்கென்றது அவசியம் போகணுமா? நமக்கு இப்போ வர்றது போறாதா? நான் வேற இங்க ரெண்டு பசங்களையும் வச்சுண்டு தனியா அல்லாடணும். மனம் பத்து வருடங்களாக அதைத்தானே பண்ணினோம் எனக் கேட்டது. முகுந்தன் ஆபீஸே கதியென்று இருந்தான் எத்தனை கல்யாணங்களுக்கு தான் மட்டும் குழந்தைகளை அழைத்துப் போயிருக்கிறாள்.அன்று பார்த்து அவனுக்கு முக்கியமான மீட்டிங் இருக்கும். குழந்தைகள் லீவுக்கு ஊட்டி, டார்ஜிலிங் என்று ஒரு வாரம் போய் வரவே ஆயிரம் முறை சொல்ல வேண்டும்.குழந்தைகளோடும் அதிக நேரம் முகுந்தன் இருப்பதில்லை என்று தோன்றியது. ஏற்கனவே தானும் தனிமையில் இருக்கிறோமோ என்று நினைக்க ஆரம்பித்து இருந்தாள். மாலு,மாலும்மா... சீக்க...

காதல்

 சங்கரன் காபியைக் குடித்த படி அன்றைய தினமலரைப் படித்துக்  கொண்டிருந்தார். காபி அருமையா இருக்கும்மா_எனறார். எப்படிப் போட்டுக் கொடுத்தாலும் தினமும் இதையே சொல்வதை எண்ணி மீனாட்சி மனதில் மகிழ்ச்சி பொங்கிற்று. எளிதில் மகிழ்ந்து விடும் கணவனை எண்ணிப் பெருமிதம் கொண்டாள். அதான் தினமும் சொல்லறேளே.இன்னிக்கு ராசிபலன் என்ன போட்டிருக்கான்னு பாருங்கோ. என் ராசிக்கு காரிய சித்தி உன் ராசிக்கு டென்ஷன் விளையாட்டெல்லாம் இருக்கட்டும்.அமெரிக்காவுல இருக்க பையனுக்கு கல்யாணம்  பண்றதா எண்ணம் இருக்கா இல்லையா!எத்தனை ஜாதகம் வந்தாலும் பொருந்த மாட்டேன்றதே . மீனு நீ ஜோஸ்யத்த நம்பறயோல்லியோ? நிச்சயமா அப்படின்னா ஒருத்தர் வாழ்க்கை அவர் ஜாதகப்படி தானே அமையும் ? அதில் என்ன சந்தேகம் ? அப்போ யாரைக் கல்யாணம் பண்ணின்டா என்ன? உங்க குதர்க்கத்தை ஆரம்பிச்சுட்டேளா ? நானும் இதுக்கு பதில் சொல்லியாச்சு. புருஷனுக்கு கஷ்டதசை வரும்போது பொண்டாட்டிக்கு நல்ல தசை இருந்தா சிரமப்பட மாட்டா இல்லியா ?.அதுக்காக தான் பொருத்தம் பார்த்தப் பண்றது.எத்தன தடவை தான் சொல்றது_அலுத்துக் கொண்டாள். சங்கரன் விடவில்லை அதே ஜோஸ்யத்துல ரெண்டு பேருக்கும்...