கடவுள்
"கோவிச்சுக்காதிங்கோ மாமி! எங்காத்துக்கார் குருக்களா இருக்கறதால 'தட்டுகாசு' பத்து இருவதுன்னு வந்துடறது!" "பரவாயில்லை சீதா!நீ எங்காத்துக்கு குடி வந்தது எவ்வளவோ நிம்மதியா இருக்கு!எப்படின்னு சொல்லத் தெரியலை!இரு!குங்குமம் தரேன்!" குங்குமம் எடுத்துக் கொண்டாள் சீதா. "மாமி!மாமாவை வரச்சொல்றீங்களா சேர்ந்து நமஸ்காரம் பண்ணறேன்!ஆசிர்வாதம் பண்ணுங்கோ!" 'இவள் ஆத்துக்காரர் அம்பாள் பக்கத்திலேயே இருக்கார்!இவளுக்கு நான் என்ன ஆசிர்வாதம் செய்யமுடியும்!' "ஏன்னா!சித்தே வரேளா!சீதா நமஸ்காரம் பண்ணனுமாம்!" மாடி பால்கனியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த நடேசன் எழுந்து வந்தார். இருவரும் சேர்ந்து நின்றதும் சீதாலக்ஷ்மி அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். "தீர்க்காயுஷ்மான் பவ!தீர்க்க சுமங்கலி பவ!சகல சௌபாக்ய சித்திர் அஸ்து!"_ என்று ஆசிர்வாதம் செய்தார் நடேசன். பாகீரதிக்கு ஏனோ கண்ணீர் வரும் போல் இருந்தது.இத்தனை கஷ்டத்திலும் எந்த "சக்தி" இவளை குடும்பம் நடத்த வைக்கிறது?இவளே தெய்வம் தானா?தெய்வத்துக்கு நான் ஆசிர்வாதம் செய்வதா?' மீண்டும் பாகீர...