நிழல்
" வசு! இன்னிக்கு ஞாயிறு.வீட்டுக்கார மாமா இன்னிக்கு தானே நம்ம ரமாவை யார்கிட்டேயோ கணக்கு 'ட்யூஷனு'க்கு அழைச்சுட்டுப் போறேன்னு சொன்னார்?" "ஆமாம்மா! ஒம்பது மணிக்கு வருவார்." "புது இடத்துக்கு வந்துட்டு நமக்கு ஒண்ணும் தெரியலை.அவரே வாத்யார் தானே?அவர் சொல்லித்தரமாட்டாராமா?மாடியிலேயே வேற இருக்கார்." "ப்ளஸ் 2 எல்லாம் அவர் சொல்லித்தரமாட்டாராம்." "உன்னோட ஸ்கூல்ல வேலை பண்றவா யாரும் இல்லையா?" "உனக்கு தெரியாதாம்மா?நான் டீச்சரா இருக்க ஸ்கூல் 8 வரை தான்." "சம்பளமும் அதேமாதிரி குறைச்சல் தான்." "அம்மா! ப்ரைவேட் ஸ்கூல்ல அப்படிதான்." "என்னமோம்மா...கைக்கும் வாய்க்குமா வாழ்க்கை போயிண்டிருக்கு.உன்னைப் பண்ணிக்கறேன்னு கேட்டு வந்தானே அந்தப் பையன் "கவர்மெண்ட்" ஸ்கூல்ல இருந்தான்.பார்க்க ராஜாவாட்டம் இருந்தான்."ஜாதகம் பொருந்தலே"ன்னு உங்கப்பா ஒத்துக்கலை.அவரும் போய் சேர்ந்துட்டார்.ஜாதகம் பார்த்து உனக்குப் பண்ணினவன் ரெண்டு வயசு ரமாவை உன்கிட்ட குடுத்துட்டு வேற கல்யாணம் பண்ணின்டு எங்கியோ இருக்கான்.என்ன ஜா...