காயம்
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா..."_ டி.வி.யில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருந்தது. குளித்து முடித்து பூஜையறையில் விளைக்கை ஏற்றிய சிவகாமி அப்போது தான் இறக்கிய டிகாக்ஷனில் சர்க்கரை குறைவாக இரண்டு காபி கலந்து எடுத்துவந்து ஹாலில் அமர்ந்திருந்த கணவர் சபேசனிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு தான் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள். காபி நன்றாக இருந்தாலும் கடமைக்கு குடிப்பது போல் தான் இருந்தது. இருவரும் ஏதும் பேசவில்லை! 'பேச என்ன மீதி இருக்கிறது?'_ என்ற எண்ணம் மனதில் ஓடியது. நித்யாவின் அறையைப் பார்த்தனர்.இருட்டாக இருந்தது.இன்னும் அவள் எழுந்திருக்கவில்லை. பொழுது விடிந்ததும் எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு காரில் ஆபீஸ் கிளம்புவாள்.திரும்பி வர இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிடும். 'நித்யாவுக்கு வாழ்க்கை விடியுமா?அல்லது இப்படியே போய்விடுமா?நமக்குப் பின் யார் துணை?' இருவர் மனதிலும் ஒரே எண்ணம் தான் தோன்றியது. பெருமூச்சு மட்டும் தான் வந்தது.கண்ணீர் வறண்டு போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது! 'எத்தனை பணமும் படிப்பும் இருந்தும் என்ன?மூன்று வருஷமாக என்ன முயன்றும் குழந்தை பிறக்காததை க...