மன வாசனை
"மீனா!நான் 'வாக்கிங்' போய்ட்டு இருட்டறதுக்குள்ளே வந்துடறேன்!கடையில் ஏதாவது வாங்கிண்டு வரணுமா?"_என்றார் சுந்தரேசன். "உங்களுக்கென்ன!சாயங்காலம் டிஃபன் காபி சாப்பிட்டாச்சு!ஜாலியா பார்க்குக்கு போய் உங்களை மாதிரி 'ரிடையர்' ஆனவாள்ளாம் சேர்ந்துண்டு பழங்கதை புதுக்கதை எல்லாம் பேசி ஜாலியா அரட்டை அடிக்கறேள்!நான் ராத்திரி என்ன டிஃபன் பண்ணலாம்னு யோசனை பண்ணவேண்டியதா இருக்கு!"_என்றாள் மீனாட்சி. "மீனா! சமையல் பண்ண ஒரு மாமியை வச்சுக்கோன்னு நானும் பசங்களும் நாலு வருஷமா சொல்லிண்டிருக்கோம்.பணமா இல்லை?" " எதுவும் முடியுற மட்டும் பண்ணனும்!" "எல்லா விஷயத்திலும் தானே?" "அட ராமா!நல்ல வேளை!பெண்ணும் பையனும் கல்யாணம் ஆகி போயிட்டா!கிருஷ்ணா ராமான்னு சொன்னா போற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்!வயசான காலத்துல இதென்ன பேச்சு?" "மீனா!நான் வித விதமா டிஃபன் பண்றதைச் சொன்னேன்.நீ வேற ஏதோ நினைச்சுண்டா நான் பொறுப்பில்லை!" "உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாதாக்கும்!" "மீனா!ஒருத்தர் மனசில் நினைக்கறது இன்னொருத்தருக்கு...