மயக்கம்
சுந்தரி கண் விழித்தாள். இதமான ஒளிவீசும் 'நைட் லேம்ப்' நேரே சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 6 மணி காட்டியது. எழுந்து உட்கார்ந்தாள். வாசல் பக்கம் இருந்த ரங்கனின் அறையைப் பார்த்தாள்.வழக்கம் போல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 'தினமும் அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்கிறான்?' பதில் கிடைக்காத கேள்வி! அவனுக்கே தெரிந்தால் தானே சொல்லமுடியும்? 'நம் வாழ்க்கையைச் செலுத்துவது யார்?' எண்ணம் எழுந்ததும் உடம்பில் இருந்த சக்தியெல்லாம் கரைந்து விட்டது போலிருந்தது. கண்ணில் லேசாக எட்டிப் பார்த்த நீரை அடக்கிக் கொண்டாள். 'கணவர் நாராயணன் இன்று வீட்டுக்கு வருவாரா? ஜெயந்தி வீட்டிலேயே தங்கி விடுவாரா?' இதுவும் பதில் தெரியாத கேள்விதான்! 'நம்முடன் இருக்கும்போது அதே அன்போடு தானே இருக்கிறார்?'_ எண்ணம் எழுந்த போது மனதில் ஆறுதல் ஏற்பட்டது. 'ஜெயந்தி என்னை விட அழகா?' 'இரண்டு கண்களில் எது உசத்தி?'_ தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். 'ஜெயந்தி நல்ல பெண் தான்.நல்ல வேலை.அந்த வேலை தானே இருவரையும் இணைத்து விட்டது!' ஜெயந்தியை எண்ணி மனதில் இரக்கம் ஏற்பட்டது. "எழுந்...