கடன்
ஜெயந்தி ஆபீஸ் முடிந்து எத்தனை வேகமாக ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு சென்றாலும் ட்யூஷன் மாஸ்டர் வீட்டுக்கு வரும்போது மணி 5.30 ஆகிவிடுகிறது. உள்ளே நுழைந்தாள்.. இவளைப் பார்த்ததும் பெண் ராமாவின் முகத்தில் மலர்ச்சி. 'பாவம்!காலையில் பள்ளிக்குச் சென்றவளை டீச்சர் தன்னோடு கூட்டிக்கொண்டு போய் ட்யூஷன் சொல்லித் தருகிறாள்.' "வாம்மா ஜெயந்தி! நான் உங்களுக்காகத் தான் காத்திண்டு இருக்கேன்.வெளியில் போகணும்.எங்காத்து மாமாவும் ஆபீஸிலிருந்து வரலை.ரமாவைத் தனியா விட்டுட்டுப் போகமுடியாதில்லையா?" "தேங்க்ஸ் மாமி! 5 வருஷத்துக்கு மேல நீங்க என் பெண் ரமாவைப் பார்த்துக்கறீங்க!என்னால் உங்களுக்கு எத்தனை சிரமம்!" "எனக்கு ஒண்ணும் சிரமம் இல்லைம்மா.ரம்யா தான் துடியா துடிச்சிண்டிருக்கா நீ எப்போ வருவேன்னு.மாமா எல்லாம் வாங்கிண்டு வந்துடுவா.நான் ப்ரதோஷத்துக்கு தவறாம கோயிலுக்குப் போவேன்.பக்கத்தில தானே கோயில்?என் ஒரே பெண்ணும் கல்யாணமாகிப் போயிட்டா..." "அம்மா! போகலாமா?"_ரமா ரமாவை ஸ்கூட்டரில் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது ஜெயந்தியின் மனம் வெறுமையாய் உணர்ந்தது. 'வாழ்...