கண்ணும் கண்ணும்
"கண்மணியே காதல் என்பது கற்பனையோ,காவியமோ,கண்வரைந்த ஓவியமோ..." டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த பாட்டைச் சலனம் ஏதுமின்றிக் கேட்டுக்கொண்டிருந்தான் சுரேஷ். காதல் என்பது கற்பனை தான் என்று தோன்றியது. 'இல்லாவிட்டால் காற்றில் கரைந்து போகும் மேகம் போல் காதல் எப்படிக் கரைந்து போகும்?' எண்ணம் எழுந்ததும் தன்னையறியாமல் பெருமூச்சு எழுந்தது.கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.அழுது அழுது அதுவும் தீர்ந்து விட்டது. 'வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னாலேயே திசை தெரியாத காட்டில் தனியாகத் தன்னை நிறுத்திவிட்டதை உணர்ந்தான். செல்ஃபோன் அடித்ததில் நினைவு கலைந்தது. வழக்கம் போல ரேவதியின் அம்மா தான். "மாப்பிள்ளை.ரேவதி எங்காத்துக்கு வந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுத்து.நானும் இவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம்.உங்களோட சேரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கா.என்ன காரணம்னு கேட்டாலும் சொல்லமாட்டேன்றா.அவதானே ஒத்தைக்கால்லே நின்னு பிடிவாதமா உங்களைப் பண்ணின்டா? தங்கையிடமாவது சொல்வான்னு தேவகியும் தனியா கேட்டுப் பார்த்துட்டா.என்ன காரணம்னு எங்களுக்குத் தெரியலை." "எனக்கே தெரியாத காரணம் உங்களுக்கு எப்படி...