சுமை
இரவு மணி 2 மங்களம் மறுபடியும் புரண்டு படுத்து கண்களை மூடிக்கொண்டு தூங்குவதற்கு முயற்சி செய்தாள்.கண்களை மூடலாம்.மனதை யாரால் மூட முடியும்? பக்கத்தில் படுத்திருந்த மகள் விஜயலக்ஷ்மி யைப் பார்த்தாள்.அவளுக்கு அடுத்து தூங்கிக்கொண்டிருந்த ராஜலட்சுமி யைப் பார்த்தாள்.அவளுக்குப் பக்கத்தில் அனந்தலட்சுமி! எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது ஹாலில் இருந்த 'நைட் லேம்ப்'பில் நன்றாகத் தெரிந்தது. எல்லார் பெயரிலும் 'லட்சுமி' இருந்தாலும் விஜி சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. இதை நினைத்ததும் மனம் கனத்தது. கணவர் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட இருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும்.அவர் போய் ஆறு வருஷம் ஆகிவிட்டது.எண்ணம் எழுந்ததும் 'குபுக்' கென்று கண்ணீர் பொங்கி கன்னங்களில் வழிந்து படுக்கையை நனைத்தது. விஜிக்கு இப்போதே வயது 28 ஆகிவிட்டது.அவள் சம்பளத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கும்போது அவளுக்கு எப்படிக் கல்யாணம் செய்வது? அவள் அழகாக இருந்தாலும் அழகைப் பார்த்து யார் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள்? அடுத்த இரண்டு பெண்கள்? மனதில் திகில் பரவியது. இதை விடக் குறைந்த வாடகைய...