நிழல்
" வசு! இன்னிக்கு ஞாயிறு.வீட்டுக்கார மாமா இன்னிக்கு தானே நம்ம ரமாவை யார்கிட்டேயோ கணக்கு 'ட்யூஷனு'க்கு அழைச்சுட்டுப் போறேன்னு சொன்னார்?"
"ஆமாம்மா! ஒம்பது மணிக்கு வருவார்."
"புது இடத்துக்கு வந்துட்டு நமக்கு ஒண்ணும் தெரியலை.அவரே வாத்யார் தானே?அவர் சொல்லித்தரமாட்டாராமா?மாடியிலேயே வேற
இருக்கார்."
"ப்ளஸ் 2 எல்லாம் அவர் சொல்லித்தரமாட்டாராம்."
"உன்னோட ஸ்கூல்ல வேலை பண்றவா யாரும் இல்லையா?"
"உனக்கு தெரியாதாம்மா?நான் டீச்சரா இருக்க ஸ்கூல் 8 வரை தான்."
"சம்பளமும் அதேமாதிரி குறைச்சல் தான்."
"அம்மா! ப்ரைவேட் ஸ்கூல்ல அப்படிதான்."
"என்னமோம்மா...கைக்கும் வாய்க்குமா வாழ்க்கை போயிண்டிருக்கு.உன்னைப் பண்ணிக்கறேன்னு
கேட்டு வந்தானே அந்தப் பையன் "கவர்மெண்ட்" ஸ்கூல்ல இருந்தான்.பார்க்க ராஜாவாட்டம் இருந்தான்."ஜாதகம் பொருந்தலே"ன்னு உங்கப்பா ஒத்துக்கலை.அவரும் போய் சேர்ந்துட்டார்.ஜாதகம் பார்த்து உனக்குப் பண்ணினவன் ரெண்டு வயசு ரமாவை உன்கிட்ட குடுத்துட்டு வேற கல்யாணம் பண்ணின்டு எங்கியோ இருக்கான்.என்ன ஜாதகமோ?"
"அம்மா! பழைய கதையெல்லாம் எதுக்கு இப்போ?"_என்று சொன்னாலும் வசந்தி மனதில் வெறுமை சூழ்ந்தது.திசை தெரியாமல் கடலில்
படகு ஓட்டிக்கொண்டிருப்பது போல இருந்தது வாழ்க்கை.'நல்லவேளை.ரமாவுக்கு அப்பா இல்லாத குறை தெரியாம வளர்த்துட்டோம்.'
"அம்மா! சீனு மாமா வந்துட்டா என்னை அழைச்சுட்டு போக.."
"வாங்கோ!காஃபி சாப்பிடலாமா?"
"மாடியில் தானே மாமி இருக்கோம்.அப்புறமா சாப்பிடறேன்.நாழி ஆயிடுத்து.உங்களிடம் சொல்லணும்னு இருந்தேன்.உங்க பெண் ரமா அப்படியே உங்களை மாதிரியே இருக்கா."
"அம்மா நீயும் வரயா?"
ரமா!அம்மா வேண்டாம்.பக்கத்துல தான்.இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.நாம் ஃபீஸ் பேசி முடிச்சுட்டு உடனே வந்துடலாம்."
"சரி மாமா!"
இருவரும் கிளம்பிப்
போனதும் வசந்தி வேலையில் இறங்கினாள்.'ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தால் கவனம் அதில் இருக்கும்.கவலை இருக்காது.
சற்று நேரத்தில் இருவரும் வந்தனர்.
சீனு வண்டியை நிறுத்தும்போதே வேகமாக உள்ளே வந்த ரமா சொன்னாள்
"அம்மா!எல்லாரும் அப்பாவைப் பற்றி தானே கேட்பா?ட்யூஷன் வாத்யார்
என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு 'உன் அம்மா பேர் என்ன'ன்னு கேட்டார்."
பெண் ரமா சொன்னதைக் கேட்ட வசந்திக்கு வியப்பு ஏற்பட்டது.அவளைப் பார்த்து 'ட்யூஷன் மாஸ்டர்' ஏன் ஆச்சர்யப்பட்டு 'அம்மா பேர் என்ன?'
என்று கேட்க வேண்டும்?'
சட்டென்று அவள் தன்னைப் போலவே இருப்பது
நினைவுக்கு வந்தது.தன்னைத் தெரிந்தவர் யாராவது இருக்கும்
என்று எண்ணும்போதே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார் சீனு...
"என் ஃப்ரண்ட் ராகவனுக்கு பெண் பிள்ளைகள்னா ரொம்ப இஷ்டம்.அவனுக்கு ஒரே பையன்.காலேஜில் படிக்கிறான்"
வசந்தியின் மனம் அதிர்ந்தது.
"நான் வரேன்.நாளையிலேர்ந்தே வரச் சொல்லிட்டார்.என்னோடு வந்ததால் ஃபீஸ் வாங்கமாட்டேனுட்டார்"
சீனு சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றதை வசந்தியின் மனம் உணரவில்லை.
சீனு சொன்னதைக் கேட்டுத் திருப்தியுடன் வசந்தியின் அம்மா படுக்கச் சென்றாள்_வயதின்
அசதி யாரை விட்டுவைக்கிறது!
ஆனால் வசந்திக்குப் புரிந்துவிட்டது.
'தன்னைக் காதலித்த ராகவன் தான்'
மனம் பின்னோக்கிப் பாய்ந்தது.
'சில நிகழ்ச்சிகள் எத்தனை வருடங்களானாலும் எப்படி நேற்று நடந்தது போல் மனதில் இருக்கிறது?'
'உண்மையில் நினைவு என்பது வரமா சாபமா?'
'இரண்டுமா?'
முதன்முதல் ராகவனைப் பார்த்தது மனதில் ஓடியது.
பாரதியார் பிறந்த நாள்.
"பெண்ணுரிமை"_பற்றிப் பேச்சுப் போட்டி.
தன் பள்ளி மாணவியை வசந்தி அழைத்துச் சென்று பெயர் கொடுத்தாள்.
மாணவியும் நன்றாகப் பேசி கைதட்டல் வாங்கிவிட்டாள்.
முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
"எக்ஸ்க்யூஸ் மீ!வசந்தி நீங்க தானே?"
கேட்ட இளைஞன் தோற்றமே மனதில்
மரியாதை ஏற்படுத்தியது.
"ஆமாம் சார்!ஏன்?"
"உங்க ஸ்டூடன்டுக்கு தான் முதல் பரிசு வரும்.என்ன அருமையான பேச்சு!"
"உங்க ஸ்டூடன்டும் அழகா பேசினான்.ஆனா "பெண்ணுரிமை" பற்றி பேசுவதைக் கேட்டு கைதட்டும் கூட்டம் அதை நடைமுறைப்படுத்தினால் சம்மதிக்குமா?"
"நீங்க எதைச் சொல்றீங்க?"
"ஆண்கள் 'டைவர்ஸ்' செய்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கறதை இயல்பா எடுத்துக்குற சமுதாயம் அந்த ஆண் விட்டுச் சென்ற பெண் வேறு கல்யாணம் பண்றதை ஏத்துக்குமா?"
"நீங்க ஏன் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படறீங்க?உங்க இஷ்டப்படி வாழவேண்டியது தானே?உங்களை மாதிரி அறிவும் அழகும் உள்ள பெண்ணை விட்டுட்டுப் போக யாருக்கு மனம் வரும்?"
வசந்தியின் தலை நாணத்தில் குனிந்தது.மனதில் ஏதோ பூ பூத்தது போல் இருந்தது.
அவர்கள் காதலும் தொடர்ந்தது.
அப்பாவின் 'ஜாதகம் சரியில்லை' என்ற பிடிவாதத்தால் வேறு ஒருவரை மணந்து அவரும் தனக்கு ஒரு குழந்தையைத் தந்துவிட்டு 'டைவர்ஸ்' வாங்கி வேறு பெண்ணை மணந்து கொண்டு போய்விட்டார்.
தனி மரமாய் தன் வாழ்க்கையும் முடிந்து விட்டது.
'ராகவனிடம் சொன்னது போல் நம்மால் ஏன் வேறு மணம் செய்துகொள்ள முடியவில்லை?
தைரியமில்லையா?
சாதம் போட்டுக் கொண்டிருந்த வசந்தி மகள் ரமா சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
17 வயதுக்கு அவள் வளர்த்தி அதிகம் தான்.
கொள்ளை அழகு!
தானும் அவள் வயதில் அப்படி தான் இருந்தோம் என்ற எண்ணம் தோன்றியது.
திடீரென ஒரு பயம் தோன்றியது.
'இவளை நல்ல பையனிடம் ஒப்படைக்க வேண்டுமே...'
'நல்ல பையன்' என்று எப்படிக் கண்டுபிடிப்பது?'
'கல்யாணத்துக்கு வேண்டிய பணம்?'
மனதில் திகில் பரவியது.
'தன் வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது.அவளுக்காவது நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்'
எண்ணம் தோன்றியதும் தலை தன்னால் திரும்பி பூஜையறையைப் பார்த்தது.
'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை'_என்று தெரியாமலா சொன்னார்கள்.
கண்ணில் துளிர்த்த நீரை ரமாவுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.
'கல்யாணம் ஆன 3 வருடங்கள் சுந்தர் என்னிடம் எத்தனை
அன்பாய் இருந்தார்!ரமா பிறந்த பிறகு வாழ்க்கை சொர்க்கமாகத்தானே இருந்தது?'
திடீரென அவர் மனம் எப்படி மாறியது?
தான் பெரிய வேலையில் இல்லை.சுந்தரைப் போல் அதிகம் படிக்கவும் இல்லை _என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததாலா?
உடனே 'காலமாகிவிட்டவர் பற்றித் தப்பாக நினைக்கக் கூடாது'_என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
"என்னம்மா எனக்கு போய் நமஸ்காரம் பண்ணற?"_ரமா சிரித்தபடி கேட்டபோது தான் வசந்திக்கு சுய நினைவு வந்தது.
"பகவானை நினைச்சுண்டேம்மா"_என்று சமாளித்தாள்.
"அம்மா!இன்னும் 4 வருஷம் தான்.நான்
பி.ஈ. படிச்சு பெரிய கம்பெனில நல்ல வேலையில் சேர்ந்துடுவேன்"
மகளின் பேச்சைக் கேட்டு மனம் மகிழ்ந்தது.
அப்பா இருந்ததால்
ஆண் துணை என்று ஒன்று இருந்தது.ரமாவுக்கும் அப்பா இல்லாத குறை தெரியவில்லை.
பெரியவர்கள் ஒன்றும் செய்யாவிட்டாலும்
கூட இருந்தால் நமக்கு "ஏதோ நிழலில்" இருப்பது போல் இருக்கிறது.
"சரிம்மா! நீ படிச்சிண்டிரு.நான் கடைக்குப் போய்ட்டு வரேன்"
மனது வெறுமையாகி ஆண்கள் மீது நம்பிக்கை போய்விட்டதாலா?
விடை தெரியாத கேள்வி..
"அம்மா! பசிக்கிறது"_ரமாவின் குரல் கேட்டு வசந்தியின் நினைவு கலைந்தது.
வசந்தி கடைக்குப் புறப்படுவதற்கு முன் பூஜையறையில் சற்று நேரம் நின்று மறைந்த மாமியார் பற்றித் தப்பாக எண்ணியதற்கு பகவானிடம் மன்னிப்பு கேட்டாள்.
துணியை தினமும் துவைப்பது போல
நம் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியுமா?
'பகவானை வேண்டினால் முடியும்'_ என்று தோன்றியது.
அதேநேரம் 'நாம் வாழ்க்கையில் கண்டதை நினைப்பதில் என்ன தவறு?'_என்ற எண்ணமும் தோன்றியது.
'எல்லாம் அவன் செயல்'_ என்று பெரியவர்கள் சொல்வது மனதில் தோன்றியது.
அப்படி என்றால் 'என் அழகில் மயங்கி என்னைக் கல்யாணம் செய்துகொண்ட சுந்தர் வேறு பெண் மேல் மயங்கி தன்னை விட்டுப் பிரிந்தது யார் செயல்?
அவளையும் அதேமாதிரி விட்டுவிட்டு வேறு ஒருத்தியுடன் போய்விடுவாரா?
இதற்கு முடிவு?
ஒருவரை அழகாகக்
காண்பிப்பது யார்?
பலவிதமான எண்ணங்கள் மனதில் எழுந்ததும் வசந்தி தலையை உதறி அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.
பர்ஸையும் பையையும் எடுத்துக்கொண்டாள்.
"ரமா!கதவைத் தாள்
பொட்டுக்கோ!"
"சரிம்மா!"
தெருவில் இறங்கி நடந்தாள் வசந்தி.
வெயில் 'சுள்ளென்று' அடித்தது.
'வாழ்க்கையே வெயிலில் இருப்பது போல்தான் இருந்தது.
'தான் சுந்தரிடம் மயங்கியது போல் ரமா யாரிடமும் மயங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.'
'முடியுமா?மயக்கம் ஒருவரைக் கேட்டுக்கொண்டா ஏற்படுகிறது?'
'ஆண்கள் எப்படியோ தனியாகக் கூட வாழ்ந்துவிடுகிறார்கள்.'
'பெண்களால் முடியுமா?'
'கல்யாணம் செய்து கொள்வதால் தானே குழந்தை பிறக்கிறது...ரமா இருப்பதால் தானே நமக்கு வாழ்க்கையில் 'பிடிப்பு' இருக்கிறது?
இந்த எண்ணம் தோன்றியதும் வசந்திக்கு மனதில் ஆறுதல் ஏற்பட்டது.
பகவானுக்கு நன்றி சொன்னாள்.
கடையில் இருக்கும்போது அடுத்த கடையில் யாரோ பேசுவது கேட்டது.
குரல் ராகவன் குரல் போல் இருந்தது.எப்படி மறக்கும்?
திரும்பிப் பார்த்தாள்.
வயதாகிவிட்டாலும்
அடையாளம் தெரிந்தது.
வசந்தி ராகவன் பக்கத்துக் கடையில் இருப்பதைப் பார்த்தாலும் அவன்
இவளைப் பார்க்கவில்லை.
மனைவி பிள்ளையுடன் வந்திருந்தான்.மனைவி பிள்ளை இருவருமே லட்சணமாக இருந்தனர்.
வசந்திக்கு ஏனோ கண்ணீர் எட்டிப் பார்த்தது.
கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
'எல்லார் வாழ்க்கையையும் பகவான் தான் தீர்மானிக்கிறான்.நம் இலையில் என்ன
போடுகிறானோ அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும்.'
'எல்லோரையும் பகவான் ஆட்டிப்படைக்கும் போது யார் மேல் குற்றம் சொல்வது?"
ராகவன் இவள் பக்கம் திரும்பினான்.
நெஞ்சு படபடத்தது.
ஆனால் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.
'என் போல் இருக்கும் என் பெண்ணைப் பார்த்ததும் என் பேரைக்கேட்டவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை..'
'வயதாகி தலையும் நரைத்து விட்டதே!'
'ஆண்களுக்குப் பெண்களின் அழகு முகம் தான் நினைவிருக்கும்.'
அவன் மனைவியும் இவளைப் பார்த்துவிட்டாள்.
ஏதோ யோசனையுடன் கணவனிடம் ஏதோ சொல்வது தெரிந்தது.
உடனே ராகவன் பரபரப்பாக வசந்தியிடம் வந்தான்.
"நீங்க வசந்தி தானே?"
"ஆமாம் ராகவன்"_என்றாள் கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு.
அதற்குள் மனைவியும் பிள்ளையும் அருகில் வந்துவிட்டனர்.
"உங்க பெண் ' ட்யூஷனுக்கு' சேர் வந்ததில் இருந்து உங்களைப் பார்க்கணும்னு துடிச்சிண்டிருக்கார்.எனக்கு எல்லாம் தெரியும்.சாயங்காலம் நாங்களே வரலாம்னு இருந்தோம்.இவன் என் பையன் முரளி.B.E.முடிச்சுட்டு TCS ல வேலை பண்றான்."
"வசந்தி!ஏன் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டே?"
"வாழ்க்கை மாறும்போது நாமும் மாறித்தானே ஆகணும்?எங்காத்துக்கு வரீங்களா?பக்கத்துல தான்."
"தாராளமா வரோம்."
மனைவியும் பிள்ளையும் பின்னால் வர வசந்தியும் ராகவனும் முன்னால் நடந்தனர்.
"வசந்தி!உங்கிட்டே
ஒண்ணு கேட்பேன்.மாட்டேன்னு சொல்லிடாதே!"
"இந்த நிலைமையில் எங்கிட்ட என்ன இருக்கு?"
"உன் பெண்ணை எங்காத்து மாட்டுப்பெண்ணா
தருவியா?எங்க எல்லாருக்கும் சம்மதம்.செலவைப்பற்றி கவலைப்படாதே"
வசந்தியால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
ஆனால் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.
Comments
Post a Comment