கனவு

நாளைக்கு திருச்சிக்கு போறோம் ,கல்யாணத்துக்கு.ஞாபகம் இருக்கோல்லியோ?_ நந்தகுமார் கேட்டான்.

ஏன் இல்லாம?நீங்க தான் எல்லாம் மறந்துடுவீங்க.மூணு பேருக்கும் ரெண்டு செட் 

ட்ரெஸ் எடுத்து வச்சுட்டேன்,என்றாள் புவனா.

செல்போன் சார்ஜர் ரெண்டு எடுத்து வை .பையனை எழுப்பு.ப்ளஸ் டூ படிக்கிறவன் காலைல சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாமோ?

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.நீங்க காய் வாங்கிண்டு சீக்கிரம் வாங்க.தெரிஞ்சவாளை பார்த்தேன்னு நிதானமா வராதீங்க.அது சரி

 நீங்க ரூம் ரிசர்வ் பண்ணீங்களா?

சத்திரத்தில் தங்க இடமிருக்காது,

ஒரு ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா?எல்லா பந்துக்களையும் ஒரு சேரப் பார்க்கலாம்னு தானே அந்த காலத்துல இந்த மாதிரி எல்லாம் பண்ணியிருக்கா?

புரியறது.உங்களுக்கு தேவகியைப் பார்க்கணும்னு ஒரே பரபரப்பு.

அவதானே நம் கல்யாணத்துக்கு காரணம் ? அதுவுமில்லாம அவ உன்னோட ஃப்ரண்ட் தானே.தூரத்து உறவு வேற.அவ தானே உன் ஜாதகத்தை எங்காத்திலே குடுத்தது?

கரெக்ட் தான்.நீங்க ரெண்டு பேரும் ஒரே கோத்ரம்.இல்லாட்டா எனக்கு இடம் ஏது?இப்ப எந்த ஊர்ல வேலை பண்றா?

தெரியல.கல்யாணத்துக்கு கட்டாயம் வருவா இல்லியா?

இல்லாட்டா லும் அவாத்துக்கு போய் பார்த்துட்டா போறது.ஒண்ணும் கவலைப்படாதீங்கோ. அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கா.நம்ம ஸ்ரேயஸ்ஸ விட வயசு கம்மி தான் .இப்பவே சம்பந்தம் பேசிடலாம்.கல்யாணத்துக்கு அப்பறம் அவ கோத்ரம் மாறிடுத்து.

இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது_என்று 

சொன்னாலும் நந்து மனதில் இனம் புரியாத உற்சாகம்.

மனம் எப்போது தேவகியைப் பார்ப்போம் எனக் கேட்டுக் கொண்டே இருந்தது.மூன்று வருடப் 

பழக்கம் மறக்கக் கூடியதா?

காதலுக்கு கண் இல்லை.கல்யாணத்துக்கு கண்கள் உண்டு.

எவ்வளவு பெரிய மனம் இருந்தால் அவளே தன் 

கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வாள்.நாம் இப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க அவள் தானே காரணம்?

மறுநாள் கல்யாணத்திற்கு ட்ரெயினில் புறப்பட்டார்கள்.பயணத்தின் போது நந்து அதிகம் பேசாமல் ஏதோ சிந்தனையில் இருந்ததை புவனா கவனித்தாள்.அவளும் அதிகம் அவனிடம் பேசாமல் ஸ்ரேயஸ்ஸுடனே  பேசிக்கொண்டு வந்தாள்.

ட்ரெயினில் இருந்து இறங்கி ஓலாவில் சத்திரம் போய் இறங்கினார்கள்.

மாலை வேளை.எல்லா கல்யாணமும் போல் முதல் நாள் ரிசப்ஷன்.வருபவரும் ஒரு நாள் லீவ் போட்டால் 

போதுமே.

வரவேற்பு பலம்

டிபன் அருமையாக இருந்து.

ஆனால் 

நந்துவின் கண்கள் தேவகியைத் தேடுவதை

புவனா கவனித்தாள்.அவள் கண்களும் தேடின. இவர்களுக்கு முன்னால்

சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் பெண்ணும் நடுவில்.அழகாய் தான் இருக்கிறாள் என நினைத்தாள்.உடல் சற்று கூடியிருந்தது.

பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்றே.

அவர்கள் சாப்பிட்டு விட்டு இவர்களைக் கடந்து சென்றனர்.இவர்களைப் 

பார்த்துக் கொண்டே சென்றாலும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.நந்து அவர்களை கவனிக்கவில்லை.

சாப்பிட்டு முடித்தவுடன்

சொன்னாள்:

வாங்கோ, தேவகியை பார்க்க போகலாம்.

வந்திருக்காளா? நான் பார்க்கலையே?

அருகில் நெருங்கியதும் 

தேவகி ஏதோ குழப்பத்தில் இருப்பதைப் போல் இவளைப் பார்த்து

நீ புவனா தானே? பார்த்து எத்தனை நாள் ஆச்சு?

அப்போதும் நந்துவின் பக்கம் திரும்பவில்லை

உங்க ஃப்ரண்ட் நந்துவைப் பார்ககலையா ?

ஒ ! ஆமாமாம்.ரொம்ப வருஷம் ஆச்சோல்லியோ? எப்படி 

இருக்கீங்க நந்து?

Comments

Popular posts from this blog

ஆத்மா

கனவு

மன வாசனை