பொருள்
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்.....
மாலை ஆறு மணி
டி.வி.யில் கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டு இருந்தது.
சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பரவசம் வீடெங்கும் அந்த மாலை வேளையில் நிறைந்திருந்தது.
பத்மா மாமி கோயிலுக்குக் கிளம்பிக்
கொண்டிருந்தாள்.காதில் வைரம் ஒளி வீசிற்று
அங்கேயே பிரசாதம் சாப்பிட்டுவிட்டு ஆத்துக்காரர் க்கும் வாங்கி வந்துவிடுவாள்.இரவு உணவு அதோடு சரி.பழம்,ஒரு டம்ளர் பால்.
பேத்தி ரூம்ல விளையாடிண்டு இருக்கா.பார்த்துக்குங்கோ.அவா ரெண்டு பேரும் ஆபீஸில் இருந்து வர நாழியாகும்.
நீங்க பாட்டுக்கு எதையாவது படிச்சிண்டு உட்கார்ந்திருக்காதீங்கோ.
கூட அழைச்சிட்டு போனா என்ன?
நீங்க ஃப்ரீயா இருக்கலாம்னா?அதான்
கார்த்தால அழைச்சிட்டு போறேனே.இப்ப நான் திரும்பி வரும்போது இருட்டிடும்.இந்தக் கண்ணாடில ஒண்ணும் தெரில.போட்டுக்காமலும் இருக்க முடில.
கண்ணாடியும் கல்யாணமும் ஒண்ணு தான்_கோவிந்தன் நினைத்துக் கொண்டார்.
பார்த்தீங்களா.கார்த்தால சொல்ல மறந்துட்டேன்.பெருமாள்
கனால வந்தார்.மீதியெல்லாம் மறந்துடுத்து.
வாழ்க்கையே பகவான் காணும் கனா தான்
என்ன சொல்றேள்?
நம் கல்யாணப் போட்டோவை பார்.நான்
எவ்வளவு ஸ்மார்ட்டா ட்ரிம்மா இருக்கேன்.இப்ப தலையெல்லாம் வழுக்கை.உடம்பும் ஊதிப் போச்சு.நீ மட்டும்
எப்படி அப்படியே இருக்க?
உங்க கண்ணுக்கு அப்படி தெரியறது _ என்று சொன்னாலும் மாமிக்கு மனதில் மகிழ்ச்சி தான்.
ஒரு கேள்வி கேக்கட்டுமா?தினமும் கோயிலுக்கு போறயே.
கேளுங்கோ
ஒரு பெண்ணைப் பார்க்க பையன் வரான்.அவ்வளவா பிடிக்கல.அடுத்த வாரமே இன்னொரு பையன் வந்து பார்க்கிறான்.உடனே பிடிச்சுடறது.கல்யாணம் ஆறது.அதே பெண் எப்படி இவனுக்கு மட்டும்
அழகா தெரியறா?
எனக்கு எப்படி தெரியும்?
எங்களைக் கேட்டா கல்யாணம் பண்ணறா?_பிகு பண்ணலேன்னா என்ன ஒய்ஃப் !
உண்மை என்னன்னு நான் சொல்லட்டுமா? உங்க இஷ்டப்படி தான்
கல்யாணம் நடக்கறது.
அது எப்படி?
நீங்க காந்தம் மாதிரி.உங்களுக்கு பிடிச்சிருந்தா அப்படியே அவனை உங்க பார்வையால் இழுத்துடறீங்க
அவன் வெறும் இரும்பு தான்.எப்படித் தப்ப முடியும்?
ஏதோ உளறாலா இருக்கு.யாருக்கு புரியறது?_ பட்டுப் புடவையை கட்டிக் கொண்டே சொன்னாள்_இருக்கிற புடவையை எல்லாம் எப்போ தான் கட்டிக்கறது?
தினமும் ஐம்பது ரூபாயாவது உண்டில போடு.நமக்கு ராத்திரி சாப்பாடு கோயில்லேர்ந்து தானே
வரது தினமும்.
எங்கிட்ட சொல்றீங்களா?என் பையன் அமெரிக்கால ஆயிரம் டாலர் கோயிலுக்கு குடுத்திருக்கான்.
இங்க என்ன பண்ணறேன்னு தான் கேட்டேன்.
அவாளுக்கு லட்சக்கணக்கில் வருது.நாமும் தான் முடிஞ்சதை குடுக்கறோம்.நான் வரேன்.
வெளியில் வந்த பத்மா பங்கஜம் மாமியும் மடிசார் புடவையுடன் சற்று தூரத்தில் வந்து கொண்டிருப்பதைப்
பார்த்தாள்.
கோயிலுக்கு தானே மாமி?
ஆமா.வா போகலாம்.உனக்கு விஷயம் தெரியுமோ?.விச்சுவுக்கு
கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து.
அட! பெண்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டானே!
கணவர் சொன்னது சரிதானோ என நினைத்தாள் பத்மா
கோயிலில் இருந்து வீடு திரும்பிய பத்மா வாயிற்படி அருகில் இரண்டு பேர் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தாள்.
அப்போது தான் வந்திருப்பது போல் தெரிந்தது.
கணவர் வரதனும் உள்ளிருந்து வந்து வரவேற்றார்.
உட்கார்ந்தனர்.
ஐயா நாங்க உங்க ஊர்ல இருந்து வரோம்.
வரதனுக்கு அவருடைய ஊர் எது என நினைவுக்கு வரவில்லை.
அதாவது.....
வந்தவாசிங்க...
ஓ.என்ன விஷயம்?
அப்பா அந்த ஊரில் சிறுவயதில் இருந்தார்.நிலம் கொஞ்சம் இருந்தது.எல்லாவற்றையும் அப்போதே விற்று விட்டார்.அதில் ஏதாவது பிரச்சினையா?
பச்சையம்மன் கோயில் ரொம்ப பழசாயிடுச்சிங்க.புதுசா கட்டி கும்பாபிஷேகம் பண்ணலமனு இருக்கோம்.உங்களால் முடிஞ்ச உதவி....
வரதன் திடுக்கிட்டார்.குல தெய்வத்தை எப்படி மறந்தோம்?
வாழ்க்கையின் ஓட்டத்தில் முக்கியமானவற்றை மறந்து விடுகிறோம்.
எல்லா செலவையும் நானே ஏத்துக்கறேன் ,என்றார்.
வந்தவர்கள் முகத்தில் மலர்ச்சி
பத்மாவுக்கு மலர்ச்சியுடன் வியப்பும்
ஏற்பட்டது
Comments
Post a Comment