பசியும் உணவும்
"இந்து! கோயிலுக்குப் போலாமா?"
"வாங்கோ மாமி!வெள்ளிக்கிழமை அம்பாள் மாதிரி வந்திருக்கீங்க.உங்களைப் பார்த்தாலும் அம்பாள் மாதிரியே இருக்கு.உட்காருங்கோ.டிபன் பண்ணின்டிருக்கேன்.ஆயிடுத்து"
"அப்படியே ஆத்துல விளக்கையும் ஏத்திட்டு வா.அம்பாள் எல்லா இடத்திலயும் இருக்கா."
"சரி மாமி."
"ஆத்துக்காரர் எங்கே?"
"படிச்சிண்டிருக்கார் மாமி"
"என்ன படிச்சிண்டிருக்கார்.
பாகவதம் மாமி.விளக்கேத்தறச்சே எழுந்து முகம் அலம்பிண்டு விபூதி இட்டுண்டுடுவார்.விஷ்ணு சஹஸ்ரநாமம் டி.வி.ல வரும்.கூடவே சொல்லுவார்."
"பசங்க ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணிப் பேரன்
பேத்தியும் எடுத்தாச்சு.பக்தி
மார்க்கத்துல இறங்கறது நல்லது தான்.கார்த்தாலே நீ எப்போ எழுந்துக்கறே?"
"நான் 5 மணிக்குள்ள எழுந்து பல் தேய்ச்சுட்டு தீபம் ஏத்திடுவேன்."
"ஆத்துக்காரர்?"
"அவர் ஆபீஸ் போகும்போது ஆறுமணிக்கு தான் எழுந்திண்டிருந்தார்.ஆனா நான் இப்போ அவரையும் 5மணிக்குள்ள எழுந்து சுப்ரபாதம் சொல்லச் சொல்லிட்டேன்.அவரும் அதே மாதிரி பண்ணறார். காபி சாப்பிட்டுக் குளிச்சுட்டு சந்தியாவந்தனம் பண்ணறார்.தினமும் 1008 காயத்ரி ஜபமும் பண்ணச் சொன்னேன்.அதும்படியே பண்ணறார்."
"டி.வி.பார்க்கிற பழக்கம் உண்டோ?"
"நியூஸ் மட்டும் பார்ப்போம் மாமி.மீதி சேனல்லாம் கண்டதையெல்லாம் காண்பிக்கறா.அதெல்லாம் பார்த்தா அப்புறம் நாம் பண்ற பூஜைக்கு
அர்த்தம் ஏது மாமி?"
"ரெண்டுபேரும் மடியா இருக்கீங்களோ?"
"ஆமாம் மாமி.அவர் என் மேல படறதில்லை"
"போட்டதைச் சாப்பிடறாராக்கும்."
"ஆமாம் மாமி! எப்படி நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க?"
"உன்கிட்ட பேசறாரோ?"
"முன்னே மாதிரி கலகலப்பா பேசறதில்லை மாமி.கேள்வி கேட்டா பதில் சொல்றார்.அதான் மாமி எனக்குக் கவலையா இருக்கு"
"நீ தான் கலகலப்பா இருந்தவரை மாத்திட்டே."
"என்ன மாமி சொல்றீங்க?"
"பக்தியா இருக்கறது முக்கியம் தான்.ஆனா பக்தியா இருக்கவாளுக்கும் பசி எடுக்குமா எடுக்காதா?"
"எடுக்கும் மாமி"
"சாப்பிட்டாதானே
பசி போகும்?அப்போ தானே மனசிலும் உடம்பிலும் தெம்பு வரும்?வெறும் பக்தி மட்டும் இருந்தா
உடம்பில் தெம்பு வருமா?"
"வாஸ்தவம்தான்
மாமி"
"பக்தின்றது மனசுக்குத் தெம்பு.உடம்புக்கும் தெம்பு வேணும்னா அதுக்கு வேண்டியதைத் தரணும்.
"கீதைல என்ன சொல்லியிருக்கு
தெரியுமா?"
"என்ன மாமி?"
"நம் உடம்புல உயிர் இருக்கற வரைக்கும் உணர்ச்சிகளும் இருக்கும்னு சொல்றது."
"உண்மைதான் மாமி.எண்பது வயசானாலும்
பாயசத்தை ஆசையா குடிக்கறா?"
"அதேமாதிரி அப்பேர்ப்பட்ட விஸ்வாமித்திரரே
மேனகையிடம் மயங்கிட்டார்"
"ஆமாம் மாமி"
"வெறும் ஆன்மிகம் மட்டும் இருந்தா அது சன்யாசம்.லௌகீகமும் சேர்ந்தது
தான் சம்சாரம்."
"புரியறது மாமி.சாரம் இருக்கறது தான்
சம்சாரம்"
Comments
Post a Comment