விதி
பூஜையறையில் கண்மூடி பகவானிடம் மௌன மொழியில் பேசிக்கொண்டிருந்த சுந்தரி டம்ளர் கீழே விழுந்த சப்தம்
கேட்டுக் கண் திறந்தாள்.
கணவர் நடேசன் தானே காஃபி கலந்து கொண்டிருப்பதைக்
கண்டாள்.
"உங்களை யார் காஃபி கலந்துக்கச் சொன்னது?என்னைக் கேட்கக் கூடாதா?"
"கார்த்தாலே நீ பகவானோட பேசிண்டிருக்கும் போது நான் குறுக்கே வரலாமா? ரொம்ப நாழி பேசிண்டிருந்தியே!பகவான் என்ன சொன்னார்?"
"அது புரிஞ்சுதுன்னா நான் ஏன் கண்ணை மூடிண்டிருக்கப் போறேன்?கல்யாண வேலையை கவனிக்க மாட்டேனா?"
"எல்லாம் ஒத்துப் போனாலும் ஜாதகம் குறுக்க நிக்கறதே!உனக்கு ஜோஸ்யத்துல நம்பிக்கை உண்டா இல்லையா?"
"அதனால் தானே அவஸ்தைப் படறேன்? ஒரு ஜோஸ்யராவது நம்ம மீனா ஜாதகம்
எங்கண்ணா பையன் சுந்தர் ஜாதகத்தோடு பொருந்தறதுன்னு சொல்லலையே! போறாததுக்கு ரெண்டு பேரையும் சேர்க்கக் கூடாதுன்னு வேற சொல்றா!அதுங்க ரெண்டும் ஒருத்தர் மேல் ஒருத்தர் உயிரா இருக்குங்க!நான் தான் கிடந்து அல்லாடறேன்.இந்தாங்கோ காஃபி!"
"சுந்தரி! காஃபி அருமையா இருக்கு!"
"உங்களுக்கு எந்தக் கவலையுமே கிடையாதா?"
"சுந்தரி! பேர் பொருத்தம் போறாதா? மீனாட்சி
சுந்தரேஸ்வரர்னு தானே அம்பாளையும் ஸ்வாமியையும் ஜோடி சேர்த்திருக்கா?"
"உங்களுக்கு எல்லாம் விளையாட்டு தான்!ஏன்னா!திருப்பதி போய் என்ன உத்தரவு வரதுன்னு
பார்க்கலாமா?நம் மனசுக்கு கொஞ்சமாவது சமாதானம் வேண்டாமா?"
"இங்கே இருக்க பகவான் தானே அங்கேயும் இருக்கார்? அங்கே மட்டும் உனக்கு என்ன புரிஞ்சுடப் போறது?"
"எடக்கு முடக்காவே பேசிண்டிருக்காம ஏதாவது வழி சொல்லுங்கோ!எனக்கு ஒண்ணு தோணறது!"
"என்ன?"
இப்போ மீனாவுக்கு
அஷ்டமத்துல சனி!அது முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிடலாம்!"
"அம்மா! ஏழரை சனி
நடந்தா ஏழரை வருஷத்துக்கப்புறம் கல்யாணம் பண்ணுவியா? எனக்கு "யு.எஸ்." ப்ராஜக்ட் கிடைச்சிருக்கு!3 வருஷம் அமெரிக்கால வேலை!உனக்கு ஒரு மாசம் தான் டைம்! சுந்தருக்கும் "விஸா" கிடைச்சுடும்.நாங்க
ரெண்டு பேரும் அமெரிக்கால கல்யாணம் பண்ணிக்கறோம்!நீங்க இங்கே இருந்தே அட்சதை போடுங்கோ!"
சொல்லிக் கொண்டே தன் அறையிலிருந்து வெளியில் வந்தாள்
மீனா!
"மீனா! என்னடி இப்படிக் குண்டைத் தூக்கிப் போடறே! உனக்கு விஸா கிடைச்சுடுத்து!சுந்தருக்கு விஸா கிடைக்கலேன்னா?"
"அம்மா! நீ முதல்ல 'பாசிடிவ்'வா யோசிக்க கத்துக்க!"
"ஆமாம் சுந்தரி! 'யத் பாவம் தத் பவதி' அப்டின்னு சொல்லுவா!நாம் எதை தீவிரமா நினைக்கிறோமோ அது நடக்குதுக்கு உண்டான வழியெல்லாம் தெரிய ஆரம்பிக்கும்!"
"அப்படின்னா எல்லாருக்கும் கேட்டதெல்லாம் கிடைக்குமே?"
"அவா மனசோட தீவிரத்தை பொறுத்து தான் நடக்கும்.நினைக்கும் போதே 'நடந்தா நல்லது' அப்படின்னு நினைக்காம 'நிச்சயம் நடக்கும்' அப்டின்ற எண்ணம் ஏற்படணும்."
"ரொம்ப தேங்க்ஸ்பா!"
"வழக்கம் போல அப்பாவும் பெண்ணும் ஒண்ணா சேர்ந்துட்டேளா?ஜோஸ்யம்னு காலம் காலமா நாம்
பார்த்துண்டு வாழறது அபத்தமா?"
"சுந்தரி!நான் அப்படிச் சொல்லலை! பகவான் என்பவர் எல்லாத்துக்கும் மேலே! பகவானால்
முடியாதது உண்டா?"
"இருந்தாலும் பெத்த மனசு அல்லாடறதே! மீனா
கல்யாணம் நல்லபடியா நடந்தா
தானே அடுத்து ரம்யா கல்யாணம் நடக்கும்? ரெண்டு வயசு தானே வித்தியாசம்?"
"மீனா!உன் தங்கை யாரையாவது 'லவ்' பண்றதுக்கு முன்னாடி அவன் ஜாதகத்தை வாங்கி
பொருத்தமா இருக்கான்னு பார்த்துட்டு 'லவ்' பண்ணச் சொல்லு!"
"அட ராமா! நீங்களே
ஜாதகம் வாங்கி பொருத்தம் பார்த்து
ரம்யா விடம் தந்தாலும் தருவேள்!"
"நாமே பார்த்தா அவா ஏன் பார்க்க போறா?"
"என்னமோம்மா! ஆண்டவன் விட்ட வழி!"
"அம்மான்னா அம்மா தான்!"_மீனா
அம்மாவை இறுக அணைத்துக் கொண்டாள்!
"மீனா!பல் தேய்க்காம பக்கத்துல வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?"
நடேசன் முகத்தில் புன்னகை!
அதே நேரம் உள்ளே
கண் விழித்தபடி படுத்துக் கொண்டிருந்த ரம்யா 'என் ஜாதகத்துடன் முரளியின் ஜாதகம்
பொருந்துமா?'_ என்ற சிந்தனையில் இருந்தாள்.
'முதலில் நல்ல வேலை தேடிக் கொள்ளவேண்டும்!'_ விழிப்பு வந்துவிட்டாலும் படுக்கையில் படுத்திருந்தபடி ரம்யாவின் மனம் எண்ணியது!
அக்கா மீனா அம்மாவிடம் தனக்கு "அமெரிக்காவில் வேலை கிடைத்து விட்டது!"_என்று சொன்னது கேட்டு மனதில் மகிழ்ச்சி பொங்கியது.
'எனக்கும் அமெரிக்காவில் ஏதாவது வேலை ஏற்பாடு செய்ய மாட்டாளா?'
அதைவிட அங்கு 'எம்.எஸ்' இரண்டு வருஷம் படித்தால் 3
வருஷம் தங்கி வேலை செய்யலாம்! அதற்கு 60 லட்சம் ரூபாயாவது வேண்டுமே!அப்பாவிடம் சொல்லி 'பேங்க் லோன்' ஏற்பாடு செய்யச் சொல்லலாம்!'
எண்ணம் எழுந்ததும் வேகமாக எழுந்து வெளியில் வந்தாள்
ரம்யா!
"அம்மா! நானும் அமெரிக்கா போகப் போறேன்!"
"ரம்யா!நீ படுக்கையில் படுத்துண்டே எல்லாம் கேட்டுண்டு இருந்தியா? 'சைதாப்பேட்டைக்கு
போறேன்'ற மாதிரி சொல்றே?"
"அதை விட சுலபம்மா!"
"மீனா! என்னடி சொல்றா இவ?"
"ரம்யா சரியா தான் சொல்றாம்மா!அவளுக்கு என்னை
விட மார்க் அதிகம்.ஜி ஆர் ஈ டோபெல் எல்லாம் ஈஸியா பாஸ் பண்ணி அமெரிக்கால நல்ல
யுனிவர்சிட்டியில் எம்.எஸ் அட்மிஷன் கிடைக்கும். 2 வருஷத்துக்கும் சேர்த்து 80 லட்சம் போல் செலவாகும்.பேங்க் ல லோன் தருவா!நமக்கு தான் சொந்த வீடு இருக்கே!முதல்ல கொஞ்சம் பணம் போடணும்!நான் ஏற்பாடு பண்றேன்.படிப்பு முடிஞ்சதும் 3 வருஷம் அங்கே வேலை பார்க்கலாம்.சம்பளம் எவ்ளோ தெரியுமா?வருஷத்துக்கு 1 கோடி!"
சுந்தரிக்கு நொடியில் உலகமே
மாறிவிட்டது போலிருந்தது.
"இத்தனை சுலபமா கோடீஸ்வரன் ஆக முடியுமா?உனக்கு வேற நான் அமெரிக்கா மாப்பிள்ளை பார்க்கணும்..."
"சுந்தரி!இத்தனை பண்றவாளுக்கு தன் ஜோடியை தேடிக்க தெரியாதா?அந்த காலத்துல நமக்கு ஒண்ணும் தெரியாதுன்னு பெரியவாள்ளாம் பார்த்து வச்சா..."
"எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றேளா.."
"அசடு மாதிரி பேசாதே! உன் அன்புக்கு ஆயிரம் அமெரிக்காவும் ஈடாகுமா?"
பெண்கள் இருவரும் 'கலகல' எனச் சிரித்தனர்.
"அம்மா! அப்பா உன்
மேல் எத்தனை அன்பாய் இருக்கா!நாங்களும் அன்பா இருக்கவாளை தான் தேடறோம்!"
"என்னமோம்மா!ரெண்டு பேரும் அமெரிக்கா போயிட்டா வயசான காலத்துல எங்களை பார்த்துக்கிற பொறுப்பு ரங்கன் மேலேயும் வரப்போற மாட்டுப் பெண் மேலேயும் தான்!"
"அம்மா! கவலைப்படாதே!ரங்கன் கல்கத்தாவில் ஐ.ஐ.எம்.முடிச்சுட்டு வர 6 மாசம் தானிருக்கு!அவன் படிப்புக்கு இங்கேயே 1 கோடி ரூபாய் வருஷத்துக்கு கிடைக்கும்.பெங்காலி பெண்கள் எல்லாம் நல்ல சிவப்பு.பார்க்க லட்சணமாவும் நல்ல குணமாகவும் இருப்பா!ரங்கன் யாரையாவது 'லவ்' பண்ணினா வேண்டாம்னு சொல்லிடாதே!"
மீண்டும் சிரிப்பொலி!
"எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்! இப்பவே மூணு கல்யாணமும் முடிஞ்சுட்ட மாதிரி இருக்கு!நான் எதுக்கு ஜாதகத்தை கட்டிண்டு அழணும்?"
"சுந்தரி!இப்போ தான் நீ சரியா பேசறே! தீர்க்காயுஷ்மான் பவ..சகல சௌபாக்ய சித்திர் அஸ்துன்னு சொல்லி அட்சதை போடறது மட்டும் தான் நம் வேலை!"_
என்று நடேசன் சொன்னபோது கல்கத்தாவில் உள்ள 'ராஷ் பிஹாரி அவென்யூ'
அருகே உள்ள "ப்ரியா" தியேட்டரில் ரஞ்சனியும் ரங்கனும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரங்கனும் ரஞ்சனியும் கல்கத்தாவில் 'ப்ரியா' தியேட்டரில் காலைக் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்தார்கள்.
"ரங்கு!இன்னிக்கு கட்டாயம் எங்காத்துக்கு வரீங்க!எத்தனை நாள் தான் எங்காத்துல நம் விஷயம் சொல்லாம இருக்கமுடியும்?பயப்படாதீங்க!நாங்க முகர்ஜி!பெங்காலி ப்ராமணர்!
"எனக்கென்னவோ இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு
தோணறது.என் அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன பின்னாடி தான் நம் கல்யாணம்.நீ எப்படி இத்தனை அழகா தமிழ் பேசறே?"
"இங்கே நிறைய பேர் தமிழா இருக்கா!எனக்கு நிறைய தமிழ் ஃப்ரண்ட்ஸ் உண்டு!"
"பாய் ஃப்ரண்டும் உண்டா?"
"ஏன் இல்லாம?ஆனா நீங்க சந்தேகப்பட வேண்டாம்.ஆண்கள் மனசு தான் அழகை தேடி அலையும்.எங்களுக்கு அன்பு தான் உயிர்!"
ரங்கனுக்கு பெருமையாக இருந்தது.ரஞ்சனியின் கையுடன் தன் கையை இறுக கோர்த்துக் கொண்ட போது விண்ணில் பறப்பது போலிருந்தது.
"சரி!உங்காத்துக்குப்
போகலாம்!"
இருவரும் ரஞ்சனியின் காரை நோக்கி நடந்தனர்.
ட்ரைவர் இவர்களைக் கண்டதும் கார் கதவைத் திறந்து விட்டார்.
காரில் செல்லும் போது ரங்கனின் மனம் பெரும் குழப்பத்திலும் அச்சத்திலும் இருந்தது.
'இத்தனை தூரம் படிக்க வந்த நமக்கு இவளிடம் எப்படி காதல் ஏற்பட்டது?உடன் படித்து பழகியதாலா? வேறு பெண்களும் தான் படிக்கிறார்கள்!நம் காதல் கல்யாணத்தில் முடியுமா?'
"ரங்கு!என்ன யோசனை?"
"ரஞ்சனி!உன் அப்பாவும் அண்ணாவும் கல்கத்தா ஹைகோர்ட் ல சீனியர் அட்வகேட்ஸ்..."
ரஞ்சனி சிரித்து விட்டாள்.
"அது கோர்ட்டில்.வீட்ல எனக்கு அப்பா அண்ணா! பயப்படாதீங்க!"
அதற்குள் கார் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைந்து பலவித மரங்களையும் பூச்செடிகளையும் கடந்து சென்று பங்களா வாசலில் நின்றது!
கீழே இறங்கிய ரங்கன் ப்ரமித்தான்!
அரண்மனை போன்ற வீடு!நிறைய வேலைக்காரர்கள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
இவர்கள் வருவதைப் பார்த்து
ரஞ்சனியின் பெற்றோரும் அண்ணாவும் வாசலுக்கு வந்து வரவேற்றார்கள்.
"வெல்கம்!வெரி க்ளாட் டு மீட் யூ!"
"நமஸ்காரம்!"_ என்று கை கூப்பினான் ரங்கன்.
உள்ளே எங்கு பார்த்தாலும் செல்வச் செழிப்பு மின்னியது!
'நாம் சாதாரணமாயிற்றே!சம்மதிப்பார்களா?"
"ரஞ்சனிஸ் செலக்க்ஷன் இஸ் எக்ஸலென்ட்!வி ஆர் க்ளாட் டு அக்செப்ட் யூ ஆஸ் அவர் சன் இன் லா!.ஷி அஸ் டோல்ட்
அஸ் ஆல் அபௌட்
யூ!"
ரங்கனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது!
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு சுந்தரியும் நடேசனும் வெளியில் வந்தார்கள்.
சுந்தரியின் அண்ணா சபேசனும் மன்னி மங்களமும் காரில் இருந்து இறங்கினார்கள்!
அண்ணா!மன்னி!வாங்கோ! வாங்கோ!இப்போ தான் மீனா கல்யாணம் பத்தி பேசிண்டிருந்தோம்.நீங்களே வந்துட்டீங்க!தெய்வ சங்கல்பம்!"
எல்லோரும் உள்ளே வந்து அமர்ந்து காபி சாப்பிட்டனர்.
சபேசன் ஆரம்பித்தார்.
"இதோ பாரு நடேசா!உனக்கு தெரியாதது இல்லை!நாம் ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சவா!"சுபஸ்ய சீக்கிரம்" னு பெரியவாள்ளாம் சொல்லுவா! நல்ல விஷயத்தை தள்ளிப் போடக்கூடாது!"
"வாஸ்தவம் தான் சபேசா!சுந்தருக்கு விசா கிடைக்கலேன்னா சிறுசுக ரெண்டும் தனியா இருக்கணும்!"
"சுந்தருக்கு விசா நிச்சயம் கிடைச்சுடும்னு அவன் மேனேஜர் சொல்லிட்டான்.அதைச் சொல்லத்தான் வந்தேன்!"
"அப்போ கெட்டி மேளம் தான்! 18ம் தேதி நல்ல முகூர்த்தம்! அதுக்குள்ளே சத்திரம் முதற்கொண்டு எல்லாம் ஏற்பாடு பண்ணனும்!"
"பேஷா! தோஷத்துக்கு பரிகாரம் பண்ணா போறும்னு ஜோஸ்யர் சொல்லிட்டார்!நானும் வரேன்!சேர்ந்து பண்ணுவோம்!"_ சபேசன்.
"மங்களம் வந்தாலே மங்களம் தான்!"_ என்று மன்னியை பெருமையுடன் அணைத்துக் கொண்டாள் சுந்தரி!
மீனா மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டாள்!
"உனக்கு 'லைன் க்ளியர்டி! முரளி கிட்டே சொல்லிடு!"_தங்கை ரம்யாவைப் பார்த்து சொன்னாள் மீனா!
'இவளுக்கு நம் விஷயம் எப்படித் தெரிந்தது!'நாம் காதலிப்பது யாருக்கும் தெரியாது'ன்னு நினைப்பது எத்தனை அபத்தம்!'
"மீனா!உனக்கெப்படி
தெரியும்?"
"காதல்ல இருக்கவா அரைப் பைத்தியம் மாதிரி இருப்பா!அது சரி! நீ யூ.எஸ்.ல படிக்கப் போறையா
கல்யாணம் பண்ணிக்கப் போறியா?"
"எனக்கு யூ.எஸ்.ல படிக்கணும்!இப்போ தான் நீயும் அத்திம்பேரும் யூ.எஸ்.
போறீங்களே! உங்காத்து பக்கத்துல
இருக்க யுனிவர்சிடில
சேர்ந்து எம்.எஸ்.பண்ணப் போறேன்."
"அப்படின்னா முரளி?"
"காத்துண்டு இருக்கட்டும்!"
மீனா_சுந்தர் கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.
சுந்தருக்கு விசா வந்துவிட்டது!
இருவருக்கும் "டல்லஸ்" லேயே வேலை கிடைத்து இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து
இல்வாழ்க்கையில் இனிதே இறங்கினார்கள்.
ரம்யாவுக்கும் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ் அட் டல்லஸ் (யு டி டி) இல் எம்.எஸ்.படிக்க
இடம் கிடைத்து பேங்க் லோன் ஏற்பாடு பண்ணியாயிற்று!
ரம்யா தான் யு.எஸ்.
போவதை எப்படி முரளிக்கு விளக்குவது என்று பலவாறாக யோசித்ததில் குழப்பமே எஞ்சியது.
'தனக்கு படிப்பும் அந்தஸ்தும் அதிகமாக வேண்டும் என்று நினைப்பது தவறா?'
இதை எப்படி முரளியிடம் சொல்வது?நான் ஒன்றும் அவரை மறந்துவிடவில்லையே...'
தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு முரளியை சந்தித்தாள்!
இவளைப் பார்த்த முரளியின் முகத்தில் லேசான புன்னகை.
'பழைய உற்சாகம் எங்கே?'
"முரளி! மனசை திடமா வச்சுக்குங்கோ!"
"ஏன்?"
"நான் சொல்லப்போற விஷயம் அப்படி!"
"என்னை மறந்துவிடப் போகிறாயா?"
ரம்யாவுக்கு நெஞ்சில் முள் தைத்தது போலிருந்தது.
"முரளி!ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?"
"மீனா எல்லாம் என்கிட்டே சொல்லிட்டா!"
ரம்யா திடுக்கிட்டாள்!
கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.
"முரளி! நான் எம்.எஸ்.படிக்க நினைக்கிறது தப்பா?"
"யார் சொன்னா? அவா அவா வாழ்க்கை அவா அவாளுக்கு! இது தெரிஞ்சுண்டு காதலிக்கறது தான்
நல்லது!கல்யாணத்துக்கு பின்னாடி பிரியறதை விட இது எவ்வளவோ பரவாயில்லை!"
முரளியின் கண்களிலும் நீர் வழிந்தது.
"முரளி! ஏன் எல்லாம் முடிஞ்சுட்ட மாதிரி பேசறீங்க?"
"ரம்யா!'அவுட் ஆஃப்
சைட் அவுட் ஆஃப் மைண்ட்' அப்டின்னு
கேள்விப்பட்டதில்லை?"
"முரளி! நான் உங்களை மறந்துடுவேனா?"
"ரம்யா! அது உனக்கே தெரியாது!நாம் சந்திக்காமயே இருந்தா காதல் ஏற்பட்டிருக்குமா? காணும் காட்சியில் மயங்குவது தான் மனம்!"
"முரளி!நம் மனம் மாறாம இருக்க நாம் தினமும் பகவானை வேண்டிக்குவோம்!எனக்கு என்மேல் நம்பிக்கை இருக்கு!நீங்களும் ஐ.டி.தானே? என் அக்கா மாதிரி அமெரிக்காவில் வேலை தேடிக்க முடியாதா?"
"முயற்சி பண்றேன் ரம்யா!"
"நீங்க வரும் வரை நான் காத்துண்டு இருப்பேன்!மனசை திடமா வச்சுக்குங்கோ!நான் வரேன்"
ரம்யா போய்விட்டாள்!
சில மாதங்கள் சென்றன.
கல்கத்தா ஐ.ஐ.எம். இல் வகுப்பு முடிந்து
ரங்கனும் ரஞ்சனியும் ஒன்றாக வெளியில் வந்தனர்.
"ரங்கு!இப்போ தான் உங்க பெரியக்காவுக்கு கல்யாணம் ஆகி அடுத்த அக்காவுக்கும் எம்.எஸ். அட்மிஷன்
கிடைச்சு ரெண்டு பேரும் அமெரிக்கா போயாச்சே! நாம் கல்யாணம் பண்ணிக்க முடியாதா?நீங்க இப்போ எல்லாம் என்னிடம் சரியா பேசறதில்லை.."
"ரஞ்சனி!உங்க அந்தஸ்து எங்கே! நாங்க எங்கே! எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?"
"உங்களைப் பார்த்த
அன்னிக்கே எங்காத்துல சம்மதம் சொல்லிட்டாளே! உங்களை எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுப்போச்சு! எப்போ கல்யாணம் னு எல்லாரும் கேக்கறா?நீங்க அந்தஸ்தை பார்த்து
பயந்துடாதீங்க!அதனால் தான் என் பேரில் பேங்க்ல நூறு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதை உங்களிடம் சொல்லலை!
ரங்கனுக்கு மயக்கம் வரும் போல இருந்தது.
'இதெல்லாம் கனவா!'
ரஞ்சனி ரங்கனைப்
பிடித்து உலுக்கினாள்.
"இந்த வாரமே நாம் எல்லோரும் ஃப்ளைட் பிடிச்சு சென்னை போறோம்!"
"சரி!"_ என்றான் ரங்கன்
திடீரென வாசலில் பெரிய கார் வந்து நின்றதும் சுந்தரிக்கும் நடேசனுக்கும் ஒன்றும் புரியவில்லை.
பரபரப்புடன் வாசலுக்கு வந்தனர்.
காரிலிருந்து ரங்கன் இறங்கியதும் ஆனந்த அதிர்ச்சி!
"என்னடா இப்படி திடீர்னு?இவாள்ளாம் யாரு?இந்தப் பெண்
மகாலக்ஷ்மியே தான்!"
இருவரும் கை கூப்பி நமஸ்கரித்து வரவேற்றனர்.
"உள்ளே வாங்கோ! உட்காருங்கோ!"
ரஞ்சனியின் அப்பா தான் முதலில் பேசினார்.
"என் பேர் ஷ்யாம் சுந்தர் முகர்ஜி!இவ என் ஆத்துக்காரி ராணிமுகர்ஜி! என் பிள்ளை ராம் ப்ரசாத்!
பெண் ரஞ்சனி! ரஞ்சனிக்கு உங்கள்
பிள்ளை ரங்கனை நிச்சயம் செய்ய வந்திருக்கோம்!"
சொல்லும்போதே ரஞ்சனியின் அம்மா தான் கொண்டுவந்த
பழம் பூக்களையும்
நகைகளையும் தட்டில்
வைத்துக் கொண்டே வந்தாள்...
"நகையா நகைக் கடையா!"
வைரம் மின்னியதில் கண் கூசியது!
நடேசனும் சுந்தரியும்
ஆனந்த வெள்ளத்தில்
மூழ்கினர்!
நடேசனுக்கும் சுந்தரிக்கும் நடப்பது நிஜம் தானா அல்லது கனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
'இதோ நம் பிள்ளை ரங்கன் நம்மைப் பார்த்து நாணத்துடன் புன்னகை செய்கிறானே!'
'இது நிஜம் தான்! பகவான் அருள் இருந்தால் எது தான் நடக்காது?'
"நீங்க எத்தனை பெரிய அந்தஸ்துல இருக்கேள்? ஏணி வச்சாலும் எங்களுக்கு எட்டுமா?சாட்சாத் மகாலக்ஷ்மியே எங்காத்து மாட்டுப் பெண்ணா வரப்போறா! எல்லாமே கனவு மாதிரி இருக்கு!ரங்கா! என்னடா இதெல்லாம்? எதுவும் எங்களிடம் சொல்லவே இல்லையே! முதலில் எல்லோரும் " ஜுஸ்" சாப்பிடுங்கோ!"
எல்லாரும் புன்னகை செய்தபடி ஜுஸ் அருந்தினர்.
"இப்படி வாம்மா!"_ என்று ரஞ்சனியை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள் சுந்தரி!
"ரஞ்சனி! நீங்க எத்தனை பெரிய அந்தஸ்துல இருக்கீங்க!எப்படிம்மா ரங்கன் கிட்டே மயங்கினே?"
"அத்தை!நாங்க பெரிய பணக்காரான்னு முதல்லே ரங்கனுக்கு தெரியாது.தெரிஞ்சதும் "இது சரியா வராது" அப்டின்னு சொன்னார்.அப்போ அவர் மேல் இருந்த காதல் ரெண்டு மடங்காயிடுத்து!இப்ப கூட அப்பா உங்களுக்கு 10 கோடி
ரூபாய்க்கு பட்டும் நகையும் வாங்கிண்டு போலாம்னு சொன்னார்.நீங்க பயந்துடப் போறேள்னு 2 கோடி ரூபாய்க்கு வாங்கச் சொன்னேன்.அவர் அன்புக்கு முன்னால் இதெல்லாம் தூசு!"
சுந்தரியும் நடேசனும் ரஞ்சனியை ப்ரமிப்புடன் பார்த்தனர்.
ரஞ்சனி நாணத்துடன் புன்னகை செய்தது மனதை அள்ளியது!
'இத்தனை அழகும் செல்வமும் குணமும் உள்ள பெண் வேறு யாராவது இருக்க முடியுமா!'
"எங்களுக்கு பரிபூரண சம்மதம்!எங்கள் ரெண்டாவது பெண்
ரம்யா யு.எஸ்.ல படிக்கறா! அவள் கல்யாணம் முதலில் நடக்கணும்!"_ என்றார் நடேசன்.
இப்போது ரஞ்சனியின் அம்மா
பேசினாள்...எப்படி எல்லாருக்கும் தமிழ் வருகிறது!
"மாமி!தவறா நினைக்காதீங்க! வாழவேண்டிய வயசுல வாழ்க்கையை அனுபவிக்காம ஏதோ காரணம் சொல்லி தள்ளிப் போடலாமா! உங்க பெண் கல்யாணம் எப்போ வேணாலும்
நாங்களே நடத்தி வைக்கிறோம்! இன்னும் 3 மாசத்துல இவா படிப்பு முடிஞ்சதும் கல்யாணம். கல்கத்தாவில் எங்களுக்கு 4 பங்களா இருக்கு!எது பிடிச்சிருக்கோ அங்கே இருக்கட்டும்.எங்களால பெண்ணைப் பார்க்காம இருக்க முடியாது.நீங்க ரெண்டு பேரும் அங்கேயே வந்து இன்னொரு பங்களாவுல இருங்கோ.வேலைக்காரா சமையல் மாமி எல்லாரும் இருக்கா!சரின்னு சொல்லுங்கோ!"
சுந்தரி நடேசனைப் பார்த்த பார்வையில் ஆசை தெரிந்தது.
"உங்க இஷ்டப்படியே ஆகட்டும் மாமி! எல்லாம் பகவான் நடத்தறார்!"_என்றார் நடேசன்
எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது சுந்தரியின் அண்ணா சபேசனும் மன்னி மங்களமும் உள்ளே
நுழைந்தனர்.
"அண்ணா!மன்னி! உங்க ரெண்டு பேருக்கும் ஆயுசு நூறு! இப்போ தான் உங்களை கூப்பிடலாம்னு நினைச்சுண்டிருந்தேன்.இவா கல்கத்தாவுலேர்ந்து நம்ப ரங்கனுக்கு
சம்பந்தம் பேச வந்திருக்கா!"
"இவர் எங்க அண்ணா சபேசன்!மன்னி மங்களம்! எங்க பெரிய பெண்
மீனா தான் இவாளோட மாட்டுப்
பெண்.கல்யாணம் ஆனதும் ரெண்டு பேரும் யு.எஸ்.போய் டல்லஸ் ல வேலை பார்க்கறா!"
மங்களம் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அதற்குள் ரஞ்சனி அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.
மங்களம் அப்படியே ரஞ்சனியை அணைத்துக் கொண்டாள்.
'இத்தனை படிப்பும் அந்தஸ்தும் இருந்தாலும் எத்தனை பணிவு!இந்தக் காலத்தில் இப்படியா!'
சபேசன் ரஞ்சனியின் அப்பாவிடம்
"உங்க சம்பந்தம் கிடைச்சது பூர்வ ஜன்ம புண்ணியம் தான்!உங்க பெண் சாட்சாத் மகாலக்ஷ்மியே தான்!"
சற்று நேரம் இருந்து டிபன் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர்.
ரங்கன் ஒருவாரம் பெற்றோருடன் இருந்துவிட்டு வருவதாகச் சொன்னான்.
எல்லோரும் சென்றபின் மங்களம் சுந்தரியை பார்த்து
"சுந்தரி! உனக்கு ரம்யா விஷயம் தெரியுமோ?" என்றாள்.
"அவ தான் யு.எஸ்.ல படிக்கிறாளே..."
"வாஸ்தவம் தான்! அதுக்கு முன்னாடி கூட வேலை செய்யற முரளியை 'லவ்' பண்ணது உனக்குத் தெரியுமோ?அந்தப் பையன் இப்போ தாடி வளர்த்துண்டு வேதாந்தி மாதிரி ஆயிட்டான்.நல்லவேளை! வேலையை விடலே! அவ அம்மா
எங்கிட்டே சொல்லி வருத்தப்படறா! வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்றானாம்.காதல்னா கல்கத்தா பெண் மாதிரி இருக்க வேண்டாமோ?"
"அட ராமா! எனக்கு ஏதும் தெரியாது மன்னி!இப்போ என்ன பண்றது?நான் ரம்யாகிட்டே பேசறேன்.அவ படிப்பை விடமுடியாதே! அவளுக்கு H1B விசா வந்தா கல்யாணம் பண்ணின்டு ஆத்துக்காரரை அழைச்சுக்கலாம்."_நடேசன்.
"எனக்கும் எதுவும் தெரியாது!மன்னி! அவா நல்ல மனுஷாளா?"_ சுந்தரி.
"நல்ல வசதியான குடும்பம்.ஒரே பையன்.நல்ல பையன் தான்!நான் பார்த்திருக்கேன்.இப்போ ஆஃபீஸ் மூலமா
யூ.எஸ்.போக ட்ரை பண்றானாம்!ஆண்டவன் விட்ட வழி! நான் வரட்டுமா?"
"தாம்பூலம் தரேன்! உங்க பேருக்கேத்த மாதிரி நீங்க வந்தாலே மங்களம் தான்!"
மங்களம் ரம்யாவின் காதல் பற்றிச் சொன்னதை அண்ணா சபேசன்
கண்டுகொள்ளவேயில்லை!
"அண்ணா!ரம்யா இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்லை!அந்தப் பையனை நினைச்சா பாவமா இருக்கு!நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?"
"சுந்தரி! ஒரு விஷயம் கவனிச்சியா?"
"என்ன?"
"உன்னோட மூணு பசங்களுமே "காதல் வலை" யில் மாட்டிண்டுட்டா! சுந்தர் ஏதோ பகவான் அனுக்ரஹத்தால மீனாவின் வலைக்குள் வந்துட்டான்.ரெண்டு பேரும் "கல்யாணம்" அப்படின்ற வலையில் மாட்டிண்டு குடும்பம் நடத்தறா?காதல் வலையானாலும் கல்யாண வலையானாலும் எத்தனை "கெட்டின்னு" பகவான் தான் தீர்மானம் பண்ணறான்.கல்யாணம் ஆனவாளே தனியா
போற காலம் இது!காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிடும்.ரம்யாவே தன் காதல் பத்தி கவலைப்படாதபோது நீ கவலைப்பட்டு என்ன ஆகப் போறது?நீ பேசினா உடனே அவ அமெரிக்காவிலேர்ந்து படிப்பை விட்டுட்டு வந்து அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறாளா?காதல்னா கற்பனை உலகம்!நிஜ உலகம் தெரியும் போது கற்பனை உலகம் கரைஞ்சு போயிடும்!"
"அருமையா சொன்னே சபேசா!"_நடேசன்.
"அப்போ அந்தப் பையன் கதி?"_சுந்தரி
"பகவான் தானே ஒருத்தரை அழகா காட்டி மனசுல காதல் உண்டாக்கினார்?ரம்யாவை விட அழகாக இன்னொரு பெண்ணைக் காட்டினா அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறான்!"
"அண்ணா!எத்தனை அழகா பேசறே!அவனுக்கு வேற யாரும் அழகா
தெரியலைன்னா?"
"அது அவன் தலையெழுத்து!நம்
சந்தோஷத்தை இன்னொருத்தர் கிட்டே அடமானம் வைச்சா மீட்க முடியாது! நீ இந்த விஷயத்தை இதோடு விட்டுடு.தானா கனியாத பழத்தை தடியால். அடிச்சு பழுக்க வைக்க முடியுமா?"
"ஆமாம் சுந்தரி!நாங்க வரட்டுமா?"_ மங்களம்
"இருங்கோ மன்னி!தாம்பூலம் தரேன்!உங்க பேருக்கேத்த மாதிரி நீங்க வரும்போதெல்லாம் கல்யாணம் தான்!"
காலம் யாருக்காகவும் நிற்பதில்லை!
மீனாவும் ரம்யாவும் அமெரிக்காவில் இருந்து தன் பெற்றோருடன் 'வீடியோ கால்" மூலம் அடிக்கடி பேசினர்.
ரங்கன் ரஞ்சனி காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் கேட்டதும்
"நிஜமாவாம்மா!நம் ரங்கனுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா?நாங்க
இங்கே இத்தனை சம்பாதிக்கிறதெல்லாம் அவன் கை செலவுக்கு கூட ஆகாது போலிருக்கே!"
"அதெல்லாம் விடுங்கடி!இத்தனை அந்தஸ்தும் படிப்பும்
இருந்தாலும் ரஞ்சனி பெரியவாளிடம் எத்தனை பணிவா இருக்கா தெரியுமா?"
"இப்பவே மாட்டுப்பெண் புகழ் பாட ஆரம்பிச்சாச்சா.."
"உங்கம்மா சொல்றது அத்தனையும் உண்மை தான்!எங்களுக்கு கல்கத்தாவில் வந்து தங்கறதுக்கு தனி பங்களா!"
"நீங்க ரெண்டு பேரும் கல்கத்தா போயிடுவீங்களாப்பா?"
"அதெப்படி?நம்ம மரியாதையை நாம் தான் காப்பாத்திக்கணும்.இத்தனை பெரிய வீட்டையும் சபேசனையும் விட்டுட்டு போவோமா?"
ரங்கனும் ரஞ்சனியும் ஐ.ஐ.எம். முடித்தனர்.
கல்யாணம் ஊரே வியக்கும் படி கல்கத்தாவில் நடந்தது!
விருந்தில் கணக்கில்லாத இனிப்பு வகைகளும் அறுசுவை உணவும்
டிஃபன் வகைகளும்
வந்து கொண்டே இருந்தன!
கல்யாணம் முடிந்த இரண்டாவது நாள்.
நடேசனும் சுந்தரியும் சென்னை ஃப்ளைட் டுக்கு தயார்!
"அத்தை!உங்க பிள்ளையைப் பிரிஞ்சு நீங்க ரெண்டு பேரும் இருக்க முடியுமா?இங்கேயே வந்துடக்கூடாதா?"_ரஞ்சனி
'எத்தனை அன்பு!அன்புக்கு அர்த்தமே
இவள் தானா?'_சுந்தரி கஷ்டப்பட்டு கண்ணீர் வராமல் பார்த்துக் கொண்டாள்.
"நடேசன் மாமா!உங்க பங்களா எப்பவும் காலியா தான் இருக்கும்!நீங்க எப்ப வேணா வரலாம்"_என்றார் ரஞ்சனியின் அப்பா.
"நிறைஞ்ச மனசோட போறோம்!குழந்தைகள் நன்னா இருக்கணும்!நமக்கு வேற என்ன வேணும்?நாங்க வரோம்!"
காரில் ஏறினர்.ஃப்ளைட்டில் ஏற்றிவிட ரங்கனும் ரஞ்சனியும் உடன் வந்தனர்.
குளித்துவிட்டு வந்த முரளி கேட்டான்.
"அம்மா!ரம்யா கிட்டேர்ந்து 'கால்' வந்துதா?"
"காலும் வரலை அரையும் வரலை! ஏண்டா முரளி! நீ கற்பனை உலகத்துலேர்ந்து நிஜ உலகத்துக்கு எப்படா வரப்போறே?"
"கல்யாண வாழ்க்கை நன்னா இருக்கும்னு கற்பனை பண்ணின்டு தானே
எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கறா? கற்பனை இல்லாம வாழ்க்கை ஏது?"
"நன்னா பேசறேடா!நாம் கற்பனை பண்றது நம் நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சமாவது ஒத்துப் போக வேண்டாமா?எழுதப்
படிக்கத் தெரியாதவன் காலேஜ் "ப்ரஃபஸர்" ஆகணும்னு கற்பனை பண்ணா
நடக்குமோ?"
"என்ன தான் சொல்றேம்மா?"
"ரம்யா நல்ல பெண் தான்.இங்கேயே இருந்திருந்தா உங்க கல்யாணம் எப்பவோ நடந்திருக்கும்.அவ எப்போ அமெரிக்காவுல படிப்பை முடிக்கறது?முடிஞ்சாலும் வாங்கின கடனை அடைக்க ஒரு வருஷமாவது வேலை செய்யணும்!அவ தம்பி கல்யாணம் கல்கத்தாவுல தடபுடலா நடந்தது.அதுக்குக் கூட ரம்யா வரலை.ரங்கனோட
படிச்ச பெண் பிடிவாதமா அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னு பண்ணின்டா!அவா
சொத்து 500 கோடி இருக்குமாம்.ரம்யா
மாதிரி மனசு மாறிண்டே இருக்கவளை நம்பிண்டு நீ எத்தனை நாள் கல்யாணம் பண்ணிக்காம இருப்பே?ஏன்னா!நீங்க இன்னும் கிளம்பளையா?"
முரளி யோசிக்க ஆரம்பித்தான்.
உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்த சங்கரன் சந்தானத்திடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டே நடந்தார்.
எதிரில் மங்களம் மாமி!
"மாமி!கல்கத்தா கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் போயிருந்தீங்களா?அவா பெரிய பணக்காராளாமே!ரங்கன் அதிர்ஷ்டக்காரன்."
"நாங்க போகாமலா?நாங்க சம்பந்தி ஆச்சே!ஏக மரியாதை!.ஃப்ளைட்லயே எல்லாரும் போய்ட்டு வந்துட்டோம்.முரளி
எப்படி இருக்கான்.உங்காத்து மாமி எல்லாம் சொன்னா!காதல் பண்ற பெண்கள்னா எல்லாருமே ரஞ்சனி மாதிரியோ
மீனா மாதிரியோ 'கல்யாணம் தான் முக்கியம்'னு இருக்க மாட்டா!இதை நன்னா எடுத்து முரளி கிட்டே சொல்லி நல்ல இடமா பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ற
வழியைப் பாருங்கோ!காதல் இருந்தாலும் நிஜ வாழ்க்கைனு வரும்போது காத்து போன பலூன் மாதிரி தான்!நான் வரேன்.மாமியை கேட்டதா சொல்லுங்கோ!"
சங்கரனைப் பார்த்த சந்தானத்துக்கு ஏக மகிழ்ச்சி!
"ராதா!நம்மாத்துக்கு
யார் வந்திருக்கா பாரு!"_ மனைவியை அழைத்தார்.
ராதாவோடு ரமாவும் சேர்ந்து உள்ளிருந்து மகிழ்ச்சியுடன் வந்து வரவேற்றனர்.
காஃபி சாப்பிட்டதும்
சங்கரன் விஷயத்தை சொன்னார்.
"சங்கரா!ரமாவை எப்படியாவது முரளிக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்கோன்னு ராதா ஒரு வருஷமா
எங்கிட்டே சொல்லிண்டிருக்கா!"
"மீனா!நம்ம ரங்கனுக்கு வந்த அதிர்ஷ்டத்தை பார்த்தியா?பல கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கு!"
"ரம்யா!எத்தனை கோடி இருந்தாலும் மூணு வேளை தானே சாப்பிடமுடியும்? இருக்குன்றதுக்காக அதிகம் சாப்பிட்டா அஜீர்ணம் ஆகி வயித்துவலி தான் உண்டாகும்!எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்டில் இருக்க ஒரு படுக்கையில் தானே படுத்துக்க முடியும்? கூட படுத்துக்கறவா மனசுக்கு இதமா இருக்கறது தான் முக்கியம்!பணம் முக்கியம் தான்.ஆனா வாழ்க்கை அதைவிட முக்கியம்."
"மீனா! நீ என்ன சொல்றையோ அதை நேரடியா சொல்!"
"ரம்யா! நீ முரளியை
விட்டுட்டு இங்கே படிக்க வந்தது சரியா?நல்ல வேலையில் தானே இருந்தே? முரளிக்கும் நல்ல வேலை! கல்யாணம் பண்ணின்டு இருக்கக் கூடாதா?"
"நிறைய பணம் இருந்தா இன்னும் வசதியா இருக்கலாமே!எனக்காக முரளி 4 வருஷம் காத்துண்டு இருக்க மாட்டாரா?நான் அடிக்கடி வீடியோ காலில் பேசிண்டு தான் இருக்கேன்.முரளியோட அப்பா அம்மாவுக்கும் தெரியும்!"
"ரம்யா! உன் எண்ணம் சரியா இருந்தாலும் முரளிக்கும் அது சரியா இருக்குமான்னு யோசிச்சு பார்த்தியா?நீ இப்போ அமெரிக்காவில்!முரளி இந்தியாவில்!இரண்டு பேரும் சேர்வது அத்தனை சுலபமா?"
திடீரென ரம்யா தான் ஏதோ தவறு செய்து விட்டதை உணர்ந்தாள்.
"மீனா! இப்போ நான் என்ன செய்யறது?"
"எதையுமே யோசிச்சு பார்த்து செய்யணும்!செய்த பின் யோசிப்பதால் என்ன பயன்?நடந்தது எதையாவது உன்னால் மாற்ற முடியுமா? அவா அவா விதிப்படி தான் புத்தி வேலை செய்யும் போலிருக்கு!"
"மீனா! எனக்கு புரிஞ்சுடுத்து!நான் என்ன செய்யணும்னு சொல்றியா?"
"வழக்கம் போல நீ தொடர்ந்து முரளியிடம் வீடியோ காலில் பேசிண்டு இரு!பகவான் விட்ட வழி!"
ரம்யா வீடியோ கால்
செய்தாள்.
எதிர்முனையில் ஓர்
அழகிய இளம்பெண்!
"கொஞ்சம் இருங்கோ!முரளியிடம் தரேன்!முரளி! அமெரிக்காலேர்ந்து உங்க ரம்யா!"
"உங்க ரம்யா!"_ என்று கிண்டலாக
சொன்னது போல் பட்டது ரம்யாவுக்கு!
ஃபோனை வாங்கும்போது ரமாவின் மேல் சென்றது முரளியின் கவனம்...'ரோஸ் கலர் ட்ரெஸ் இவளை மேலும் அழகாக்கிவிடுகிறது'...
இவன் மனதைப் படித்தது போல் "ட்ரெஸ் புதுசு!"_என்று ரமா புன்னகையுடன் சொன்னதும் முரளி திடுக்கிட்டான்!
"ரம்யா!நான் ஆஃபீஸ் மூலமா டல்லஸ் வர ட்ரை பண்ணின்டு இருக்கேன்!அனேகமா 3 மாசத்துக்குள் வந்துடுவேன்! உன் தம்பிக்கு ரொம்ப பெரிய இடத்துலே கல்யாணம் முடிஞ்சு தாமே!என்னை மறந்துடப்போறே!"
"முரளி! அந்தப் பெண் யார்?"
"அப்பாவோட ஃப்ரண்ட் சந்தானத்தோட பெண்.அவர் வரும்போது கூட வந்து அம்மாவுக்கு
உதவி பண்ணுவா.அம்மாவுக்கும் வயசாறது! இல்லையா?"
"முரளி! என்னை மறந்துடுவீங்களா?"_ ரம்யாவுக்கு தொண்டையை அடைத்தது.கண்ணீர் பொங்கியது.
"முட்டாள் மாதிரி பேசாதே ரம்யா!என்
மனசில் வேற யாருக்கும் இடமில்லை!"
'நான் எடுத்த முடிவு தானே இதற்கெல்லாம் காரணம்!'
ரம்யா இரு கரங்களையும் தூக்கி கடவுளை வேண்டியதைப் பார்த்த மீனாவும் இரு கரம் குவித்து கடவுளை வேண்டினாள்.
"எனக்கு காஃபி குடுத்துட்டு நிதானமா உட்கார்ந்துண்டு ரெண்டு பேரும் வேண்டிக்குங்கோ!ரங்கனுக்கு கிடைச்ச மாதிரி ரம்யாவுக்கும் பெரிய பணக்கார இடம் கிடைக்கும்"_என்றான் உள்ளேயிருந்து வந்த சுந்தர்!
Comments
Post a Comment