நிழல்

"பார்வை ஒன்றே போதுமே!பல்லாயிரம் சொல் வேண்டுமா?"_ என்ற பாடல் 'டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்தது.


ராகவன் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தான்.


"பாட்டு இருந்தா போதும் உங்களுக்கு!சோறு தண்ணி கூட வேண்டாம்!"_என்றாள் ரம்யா!


"உன்னைப் பார்த்துண்டு இருந்தா அந்த பாட்டு கூட வேண்டாம்!உன் பார்வையே போதும்!நீ தான் சமையல் ரூம்லயே காலம் கழிக்கறையே?"


"நீங்களே கவிஞனா 

ஆயிண்டு வர மாதிரி தெரியறதே!கற்பனையிலேயே யாரும் வாழ முடியுமா?"


"ரம்யா! காதல் கற்பனை தானே?அந்த கற்பனை இல்லாட்டா வாழ்க்கை ஏது?காதல் எப்படி ஏற்படறது?"


"கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆனாலும் அது புரியலையாக்கும்!"


"ரம்யா!உன் பேருக்கேத்த மாதிரி இன்னும் என் கண்ணுக்கு நீ ரம்யமா தான் இருக்கே!நமக்கு முன் ஜென்மத் தொடர்பு இருக்குமோ?"


"முன் ஜென்மத்தை விடுங்கோ!இந்த ஜென்மத்தில் நமக்கு அந்த ஆண்டவன் ஒரு குழந்தையைத் தரவில்லையே!கார்

பங்களா எல்லாம் இருந்தும் மனசில் சந்தோஷம் இல்லையே!நான் சொன்னபடி நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணின்டு இருந்தா எத்தனை மகிழ்ச்சியா இருந்திருக்கும்!"


"ரம்யா!நீ எனக்கு குழந்தை!நான் உனக்கு குழந்தை!காதலுக்கு முன் ஜென்மம் காரணம்னு சொல்ற மாதிரி குழந்தைக்கும் அதுதான் காரணமா இருக்குமோ? 'ஆளுக்கு ரெண்டு குழந்தைகள்' னு பிறக்கறதில்லையே!"


"கல்யாணம் கூட சில பேர் பண்ணிக்கறதில்லையே!அதுக்கும் முன் ஜென்மம் தான் காரணமா?"


"காதல் பிறந்தால் தானே கல்யாணம் பண்ணிக்க முடியும்?"


"எல்லாமே முன் ஜென்மம்னு சொன்னா இந்த ஜென்மத்துல நாம பாவம் ஏதும் பண்றதில்லையா?"


சட்டென்று ராகவனுக்கு மைதிலியின் கண்ணீர் வழியும் முகம் ஞாபகம் வந்தது!


"ரம்யா!நம் மேல் ஒருத்தர்க்கு காதல் வந்து நம்மைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக்கேட்டு நாம் மறுத்துட்டா அது பாவமா?"


"அதெப்படி?நமக்கும் காதல் ஏற்பட்டா தானே கல்யாணம் பண்ணிக்க முடியும்?காதல் ஏற்படுத்தறது கடவுள் வேலை!இந்த காபியைக் குடிச்சா உங்க குழப்பம் தீர்ந்துடும்!ரெண்டு பேருக்குமே ஆபீஸுக்கு நேரமாச்சு!"


'மைதிலிக்கு கல்யாணம் ஆகி இருக்குமா?'_ என்ற எண்ணமே காபி குடிக்கும்போதும் ராகவன் மனதில் ஓடியது!


'அவள் கண்ணீர் முகம் ஏன் என் மனதைவிட்டு மறையவில்லை?'


"ரம்யா!நல்ல வேளை!ஞாபகப்படுத்தினே!

இன்னிக்கு ஆபீஸில் 'பி.ஏ.' வேலைக்கு 'இன்டர்வியூ' பண்ணனும்!சீக்கிரம் ஏதாவது டிபன் ரெடி பண்ணு!"


"அவசரம்னா ஆபீஸ்

கேன்டீன்ல சாப்பிடக்கூடாதா?உங்களோட பேசிண்டு இருந்ததிலே டைம் ஆயிடுத்து!விசித்திரமான சந்தேகமெல்லாம் ஏற்படறது உங்களுக்கு!ஆபீஸ் ல வேலை ஒண்ணும் இல்லையாக்கும்!'ஜி.எம்' தானே!எனக்கு இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்!"


"அதுக்குள்ளே குழந்தை பிறந்தா?"


ரம்யாவின் கண்களில் கண்ணீர் முட்டியது!


ராகவனுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டாள்.


"நீங்க எனக்குக் கிடைச்சதே போறும்!சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கோ!"


ராகவன் குளிக்கச் சென்றான்.


ரம்யா சமையலறைக்குள்

நுழைந்தாள்.


இருவரும் டிபன் சாப்பிட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அவரவர் காரில் ஆபீஸ் புறப்பட்டனர்.


காலை நேரம் என்பதால் வாகனங்கள் மெதுவாகப் போய்க்கொண்டு இருந்தன.


ராகவன் மனதில் மைதிலி பற்றிய எண்ணம் ஓடியது.


'ஆண்_பெண் இருவரும் ஒன்றாக வேலை செய்யும் இடத்தில் பழக வாய்ப்பு கிடைப்பதால் காதல் ஏற்படுவது இயல்பு தான்!நிறைவேறும் காதல் கல்யாணத்தில் முடிந்து தொடர்ந்து வருகிறது!நிறைவேறாத காதல் மனதில் நின்றுவிடுகிறது!'


ராகவன் சட்டென்று 'ப்ரேக்' போட்டான்.


முன்னால் இருக்கும் பஸ்ஸில் இருந்து பயணிகள் இறங்கி அது கிளம்பும்போது தான் காருக்கு வழி கிடைக்கும்.


ராகவன் இறங்குபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்!


திடீரென ராகவன் மனதில் மின்னல் அடித்தது!


பஸ்ஸில் இருந்து அச்சு அசலாக மைதிலியைப் போன்றே ஒரு பெண் இறங்கினாள்!


இது என்ன அதிசயம்!


மைதிலி எப்படி இருபது வருஷமாக

"அப்படியே" இருக்க முடியும்!


அவள் மைதிலியின் பெண் தான்!


மைதிலிக்கு கல்யாணம் ஆகிவிட்டது!


எண்ணம் எழுந்தவுடன் ராகவன் மனதில் சொல்லமுடியாத நிம்மதி ஏற்பட்டது!


'கடவுள் இருக்கிறார்!'_ என்ற எண்ணம் தோன்றியது!


பஸ் புறப்பட்டதும் ராகவன் காரை ஓட்டிக்கொண்டு ஆபீஸில் நிறுத்திவிட்டுத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தான்.


பியூன் உள்ளே நுழைந்தான்.


சார்!உங்க 'பி.ஏ.' இன்டர்வ்யூவுக்கு கேன்டிடேட்ஸ் 'வெயிட்' பண்றாங்க சார்!"


"சரி!அனுப்பு!"


மைதிலியைப் போலவே இருந்த பெண் முதலில் உள்ளே நுழைந்தாள்!

"குட் மார்னிங் சார்!_என்றபடி உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்த ராகவன் மனதில் விவரிக்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டது.லேசான பயமும் தோன்றியது!


'விதி என்பது நம் நிழலைப்போல் நம்மைத் தொடர்கிறது!'


சட்டென்று தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்ட ராகவன் 


"ப்ளீஸ் பி சீடட்!"_ என்றான்.


"தேங்க் யூ சார்!"_ என்றபடி உட்கார்ந்தாள்!


குரல் மைதிலியின் குரல் போலவே இருந்தது ராகவன் மனதில் மேலும் திகில் ஏற்படுத்தியது!


அந்தப் பெண்ணின்

கண்களை அவனால் பார்க்க முடியவில்லை!_அவள் பார்வை அப்படியே மைதிலியின் பார்வை போலவே இருந்தது!


சட்டென்று தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டான் ராகவன்!


"உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்!"


"ஓ.கே. சார்! என் பேர் ரமா!'எம்.பி.ஏ_ கார்ப்பரேட் கோல்ட் மெடல்!மூணு வருஷம் 'எக்ஸ்பீரியன்ஸ்' இருக்கு!"_ என்று ஒரு ஃபைலை நீட்டினாள்!


"ரெகார்ட்ஸ் தேவையில்லை!சொன்னால் போதும்!"


சொல்லும்போதே ராகவனுக்கு 'தான் ஏதோ சுழலில் மாட்டிக்கொள்ளப் போகிறோம்!' என்று 

தோன்றியது!


'இந்தப் பெண்ணை எப்படி 'செலக்ட்' செய்யாமல் இருக்க 

முடியும்?நம் மனசாட்சி நம்மை உறுத்தாதா?'


'பஸ்ஸரை' அழுத்தி

ப்யூனைக் கூப்பிட்டான்!


ப்யூன் உள்ளே நுழைந்ததும்


"மற்ற கேன்டிடேட்ஸ்

எல்லாரையும் போகச் சொல்லிடு!இவங்க 'செலக்ட்' ஆயிட்டாங்க!"_ என்றான்.


ரமா ராகவனை வியப்புடன் பார்த்தாள்!முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது!


'இவள் அம்மாவைப் 

பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?'


"ரமா!உங்க அம்மாவும் உங்களைப் போலவே வேலை பார்த்துட்டு இருந்தாங்களா?"


"ஆமாம் சார்!ஆனா இப்போ இல்லை!அப்பாவும் காலம் ஆயிட்டார்!ஒரு தம்பியும் ஒரு தங்கையும் தான்!ரெண்டு பேருமே காலேஜ் படிக்கிறா!அதிக சம்பளம் கிடைக்கும்னு தான் நான் இன்டர்வ்யூக்கு வந்தேன்!என்னை செலக்ட் பண்ண துக்கு ரொம்ப தேங்ஸ் சார்!என்னை 'நீங்க வாங்க'ன்னு கூப்பிட வேண்டாம் சார்!''நீ வா' ன்னே கூப்பிடலாம்!"


"அப்பா அம்மா பேர் என்ன?"


"அப்பா பேர் கண்ணன்.அம்மா பேர் மைதிலி சார்!"

'வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் நம்ப முடியாமல் இருந்தாலும் அவை 

பகவானின் "லாஜிக்" படி நடக்கின்றன!'_ என்று தோன்றியது ராகவனுக்கு!


'பகவானின் லாஜிக்

நமக்கு எப்படித் தெரியும்?'


சட்டென்று சுய நினைவுக்கு வந்தவன்


"வெல்கம் டு அவர் கம்பெனி!எப்போ 'ஜாயின்' பண்ணறீங்க?"


"இப்பவே ரெடி சார்! பழைய கம்பெனிக்கு ஒரு மாசம் நோட்டீஸ் இல்லாட்டா சம்பளம் தரணும்.இங்கே தான் எனக்கு இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கறதே!"


ராகவனுக்கு ஏனோ 

மகிழ்ச்சியாக இருந்தது!


"சரி!'ஹெச்.ஆரை' மீட் பண்ணுங்க!பப்யூன் அழைச்சுண்டு போவான்!நான் ஹெச்.ஆர்க்கு போன் பண்ணறேன்.உங்க 

கேபின்ல இருந்து என் கேபினுக்கு 'இன்டர்காம்' இருக்கு!இது என்னோட கார்ட்! உங்களுக்கு தனி "க்வார்ட்டர்ஸ்' உண்டு!அங்கே நீங்க மூணு பேரும் தங்கிக்கலாம்!என் வீட்டுக்கு பக்கத்தில் தான்!"


ரமாவின் முகம் மேலும் மலர்ந்தது!


'இவள் எப்படி மைதிலியைப் போலவே இருக்கிறாள்!'


ரமா சென்றவுடன் சாய்ந்து அமர்ந்தான் ராகவன்!


ஏதோ ஒரு பெரிய பாரம் மனதில் இருந்து இறங்கியது போல் இருந்தது!


உற்சாகம் பிறந்தது!


நடந்த அதிசயத்தை 

உடனே ரம்யாவிடம்

சொல்லவேண்டும் என்று தோன்றியது!


செல்போனை எடுத்தான்.


அத்தனையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.


"உங்கள் மேல் காதல் கொண்ட பெண் மறு ஜென்மத்திலும் உங்களை விட மாட்டாள்!"


"அதுக்காக நாலு ஜென்மத்துலேர்ந்து

வந்த நாலு பெண்களை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"


"ராகவ்!!காதல் ஏற்படறவாளுக்கு காரணம் தெரியாது!காரணம்

தேட ஆரம்பிச்சா காதல் காணாம போயிடும்!

உங்களுக்கு வேலை ஒண்ணும் இல்லையா?எனக்கு 

இருக்கு!சுருக்கமா சொல்லட்டுமா?"


"என்ன?"


"அந்தப் பெண்ணுக்கு இஷ்டம்னா அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்குங்கோ!நமக்கும் குழந்தை கிடைக்கும்!மைதிலி ஆத்மாவும்

சாந்தியாகும்!ரம்யாவுக்கும் ரமாவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை!"


"ரம்யா!உளறாதே!என் விருப்பம்னு ஏதும் இல்லையா?அவ வயசு என்ன என் வயசு என்ன?"


"ஆண்களுக்கு ஏது வயசு?"


"உன்கிட்டே பேசினதே தப்பா போச்சு!"


போனை ஆஃப் செய்தபோது ரமா உள்ளே நுழைந்தாள்.


"சார்!ஃபார்மாலிட்டீஸ் கம்ப்ளீடட்!"


"ரமா!பெண்களுக்கு 

கல்யாணம் ஆனா தானே வாழ்க்கை 'கம்ப்ளீட்' ஆகும்?உனக்கு எப்போ கல்யாணம்?"


"உங்களை போல் சரியா முடிவு பண்ற

ஆளை தான் தேடிட்டு இருக்கேன்

சார்!உங்களுக்கு தான் ஆயிடுத்தே!"


"யார் சொன்னா?"


"ப்யூன் கிட்டே கேட்டுத் தெரிஞ்சுண்டேன் சார்!"


ரமா சொன்னதைக்கேட்ட ராகவன் திடுக்கிட்டான்.


சற்று நேரம் இருவரும் பேசவில்லை...


"சாரி சார்! எனக்கு பொய் பேசத் தெரியாது.உங்களைப் பத்தி ஏன் அப்படிக்கேட்டேன்னு எனக்கே தெரியலை!"


"இட்ஸ் ஆல் ரைட்!ஐ 

டோன்ட் மிஸ்டேக்! கல்யாணம் ஆன பெண்களுக்கு கழுத்தில் தாலி இருப்பது போல் ஆண்களுக்கும் கழுத்தில் ஏதாவது தொங்கவிட்டா இந்த மாதிரி ப்ரச்னை வராது!"_ என்று சொல்லி சிரித்தான்.


ரமாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது!


"ரமா!உனக்கு யாரும் துணை இல்லை.எந்த உதவியானாலும் தயங்காம கேள்.என்னை உன் அப்பா மாதிரி நினைச்சுக்கோ!"


"நீங்க ஃப்ரண்ட்லியா பேசறதால ஃப்ரண்ட் ஆகவே நினைச்சுக்கறேன் சார்!"


ரமா போய்விட்டாள்.


'மைதிலியின் 'ஜீன்' ரமாவிடம் இருக்கும்!நாம் தான் ஜாக்கிரதையா இருக்கணும்!'


எண்ணியபடி ராகவன் தன் லேப் டாப்பைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தார்.


காலம் யாருக்காகவும் நிற்பதில்லை!


'நாம் செய்ய எண்ணும் செயல்களை திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.ஆனால் இருக்கும் பணமே ஏராளம்!குழந்தை இருந்தால் தான் வாழ்க்கை ஓர் இடத்தில் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும்!'


எண்ணத்தை ஒதுக்கிவிட்டு வேலையில் ஆழ்ந்தான் ராகவன்.

ரமா சுறுசுறுப்பாகவும் நேர்த்தியாகவும் வேலை செய்தாள்.


ராகவன் பாராட்டு அடிக்கடி கிடைத்து ரமாவின் மனம் மகிழ்ச்சியடைந்தது.

ராகவன் மிகுந்த கவனத்துடன் ஆபீஸ் விஷயம் மட்டுமே ரமாவிடம் பேசினான்.


சில மாதங்கள் சென்றபின் ஒரு நாள்....


ராகவன் தனியாக இருக்கும்போது ப்யூன் உள்ளே வந்தான்.


"சார்!ஒரு விஷயம்!உங்க கிட்டே சொல்லலாமான்னு

தெரியலை!"


"எந்த விஷயமானாலும் தயங்காம சொல்லு!"


"ரமா மேடத்தை ஹெச்.ஆர்.டிபார்ட்மென்ட் சந்துரு'லவ்' பண்ணற மாதிரி தெரியுது!"


ராகவனுக்கு மனதில் உற்சாகம் ஏற்பட்டாலும் மறைத்துக்கொண்டு கேட்டான்:


"உனக்கு எப்படி தெரியும்?"


"அதெல்லாம் அவர் பார்க்கற பார்வையே காட்டிக்

கொடுத்துடும் சார்!ஆனா ரமா அவரோட சாதாரணமா பழகுற மாதிரி தான்

இருக்கு!"


"அது அவங்க பர்சனல் விஷயம்!நாம் என்ன செய்யமுடியும்?"


"எதுக்கும் உங்க காதுல போட்டு வைக்கலாம்னு..."


"சரி!நீ போய் உன் வேலையைப் பார்!"


ப்யூன் சென்றுவிட்டான்.


'சந்துரு நல்ல பையன்!எப்படியாவது ரமாவை சம்மதிக்க வைக்கணும்!'


இன்டர்காமில் சந்துரு வை அழைத்தான்.


"குட் ஈவ்னிங் சர்!" _ என்றபடி உள்ளே நுழைந்தான் சந்துரு!


"உட்காருங்க சந்துரு!இப்போ நாம் பர்சனல் விஷயம் பேசப்போறோம்!"


சந்துரு முகத்தில் வியப்பு தெரிந்தது!


"நீங்க ரமாவை லவ் பண்றீங்களா?தயங்காம சொல்லுங்க!"


சந்துரு முகத்தில் வெட்கம் தெரிந்தது!


"ஆனா இன்னும் ரமாவிடம் சொல்லலை சார்!"


"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.ரமாவுக்கு 'பேரண்ட்ஸ்' இல்லை!உங்க வீட்டில் எல்லாரும் சம்மதிப்பாளா?"


"நிச்சயமா சார்!"


"சரி!நீங்கள் போகலாம்!"


அவன் சென்றபின்

ராகவன் ரமாவை அழைத்தான்.


அவள் உள்ளே வந்து அமர்ந்தவுடன் கேட்டான்:

"ரமா!ஹெச் ஆர் சந்துரு பற்றி என்ன 

நினைக்கறே!"


ரமாவுக்கு புரிந்துவிட்டது

இருந்தும் தெரியாதது போல் கேட்டாள்


"எதுக்கு கேக்கறீங்க சார்?"


"அவன் என்னை மாதிரியே நல்ல பையன்.என்னை மாதிரி தானே உனக்கு வேணும்?"


சற்று நேரம் அமைதி நிலவியது.


"உங்க இஷ்டம் சார்!

ஆனா நீங்க வேற கம்பனிக்கு போகக்கூடாது.என்னையும் வேலையில் இருந்து தூக்கக் கூடாது!"


"அப்படியானா நான் 

தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்!"


இருவரும் சிரித்துவிட்டனர்.


இரவு வீட்டினுள் நுழைந்த ராகவன் முகத்தில் ஏன் இத்தனை மகிழ்ச்சி என ரம்யாவுக்கு தெரியவில்லை!


ஆனால் அவள் அவனைவிட ஆர்வமாகச் சொன்னாள்:


"நான் வேலையை விட்டுடப் போறேன்!"


"என்ன திடீர்னு?"


ரம்யா முகத்தில் பரவிய வெட்கம் அவளை தேவதையாக காட்டியது!


ராகவன் வியப்பின்

எல்லைக்கே சென்றுவிட்டான்.


காலண்டரில் இருந்த குழந்தை அவர்களைப் பார்த்து சிரித்தது!





Comments

Popular posts from this blog

ஆத்மா

கனவு

மன வாசனை