ஆசை
"காமு! அரை டம்ளர் காபி குடுக்கறயா?" காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கேட்டார். "இப்போதானே குடுத்தேன்?உங்களுக்குக் குடுத்துண்டேயிருந்தா சமையல் ஆன மாதிரி தான்.ஒரே தடவையா திருப்தியா குடிச்சா என்ன?" "நாலு நாளைக்குச் சேர்த்து சாப்பிட முடியுமா?" "நன்னா பேசத் தெரியறது.அது என்ன ஆசையோ அந்த காபி மேல..." "காமு! ஆசையாலே தான் உலகமே இயங்கிண்டிருக்கு.ஆசை இல்லேன்னா யார் கல்யாணம் பண்ணிக்குவா?யாரும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலேன்னா நூறு வருஷத்துக்கப்புறம் லோகத்துல ஜனங்க யாராவது இருப்பாளா?" "அது சரி!இந்தக் காலம் மாதிரி என்னைக் கேட்டா கல்யாணம் பண்ணினா?அப்பா அம்மா காண்பிச்ச ஆளுக்கு கழுத்தை நீட்டிட்டு அவஸ்தைப் பட்டுண்டு இருக்கேன்." "அரை டம்ளர் காபிக்கு இத்தனை பேச்சா?நாளையிலேர்ந்து ரெண்டாவது காபி ஓட்டல்ல சாப்பிட்டுக்கறேன்." "இந்தாங்கோ!காபி மாதிரி வேற ஏதாவது 'ரெண்டாவது' பிடிச்சுடப் போறேள்." காமு!என் பேரில் நம்பிக்கையில்லையா?அதுவும் இந்த வயசுலயா?" "ஆம்பளைங்களுக்கு தான் வயசுன்னு ஒண்ணும் கிடையாதே.நாங...